Xinjiangஇல் மசூதியை இடித்து, பொதுக் கழிப்பறை கட்டி அவமானப்படுத்தும் சீனாவின் அட்டகாசம்...

சிஞ்சியாங்கில் முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டது. சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்தில் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 02:49 PM IST
  • உய்குர்களின் தனித்துவமான அடையாளத்தை அழிக்க விரும்புகிறது சீனா
  • கடந்த மூன்று ஆண்டுகளில் சிஞ்சியாங்கில் 10,000 முதல் 15,000 வரை மசூதிகளை அழிக்கப்பட்டுள்ளது
  • Hotan நகரில், இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில் உள்ளாடை தொழிற்சாலை
Xinjiangஇல் மசூதியை இடித்து, பொதுக் கழிப்பறை கட்டி அவமானப்படுத்தும் சீனாவின் அட்டகாசம்... title=

புதுடெல்லி: சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்தில் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. சிஞ்சியாங்கில் முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டது. முதலில் மசூதியை இடித்த சீன அதிகாரிகள், அந்த இடத்தில் ஒரு பொது கழிப்பறையை கட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் சின்ஜியாங்கின் அதுஷ் பகுதியில் நடந்தது. சுந்தாக் கிராமத்தில் உள்ள மசூதி 2018 இல் இடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. சுந்தாக் கிராமத்தின் குடியிருப்புவாசிகள் அனைவரின் வீட்டிலும் கழிப்பறைகள் உள்ளது. இந்த கிராமத்தில் சுற்றுலாப் பயணிகள் வரத்தும் கிடையாது. எனவே உள்ளூர் கழிப்பறைக்கான தேவையேயில்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
இது சீன அதிகாரிகளுக்கும் தெரியும், அதனால்தான் கட்டிய கழிப்பறையையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்காமலேயே வைத்திருக்கின்றனர். கசப்பான உண்மை என்னவென்றால், சிஞ்சியாங்கின் உய்குர் முஸ்லிம்களை  சீனா எப்போதும் மட்டம் தட்டி, அவர்களை கீழ்நிலையில் வைக்க்வே விரும்புகிறது. சிஞ்சியாங்கில் இருந்த 70 சதவீத மசூதிகளை சீனா அழித்துவிட்டது, இப்போது கட்டியுள்ள பொதுக் கழிப்பறை மூலம், உய்குர் முஸ்லிம்களின் காயத்தில் உப்பைத் தூவி வடுவாக்கும் முயற்சியையே சீனா செய்திருக்கிறது. அவமானத்தை மட்டுமே சேர்க்கிறது.
இது சீனாவின் முதல் மசூதி இடிப்பு சம்பவம் அல்ல. 2019 ஆம் ஆண்டில், சீனா அஸ்னா மசூதியை அழித்தது, இப்போது அங்கு மது மற்றும் சிகரெட்டுகளை விற்கும்   கடை செயல்படுகிறது.
Hotan நகரில், இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில் உள்ளாடை தொழிற்சாலையை உருவாக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். பெய்ஜிங் கடந்த மூன்று ஆண்டுகளில் சிஞ்சியாங்கில் 10,000 முதல் 15,000 வரை மசூதிகளை அழித்ததாக உய்குர் மனித உரிமை திட்டம் தெரிவித்துள்ளது.  
கடந்த ஆண்டு Guardian பத்திரிகை வெளியிட்ட ஒரு அறிக்கையில், இமாம் அசிம் தர்காவின் செயற்கைக்கோள் படங்கள் இருந்தன. இந்த தர்கா தக்லமகன் பாலைவனத்தில் (Taklamakan desert) அமைந்துள்ளது. இது ஹோடன் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் முக்கியமான மதத் தளமாகும். சமீபத்தில் தர்காவைச் சுற்றியுள்ள கட்டடங்களை தகர்த்த அதிகாரிகள், தர்காவையும் இடித்துத் தள்ளிவிட்டனர். இப்போது அந்த இடம் காலியாக கிடக்கிறது.

சின்ஜியாங்கின் Kargilik நகரத்தில் இருந்த ஒரு மசூதி 2018 இல் இடிக்கப்பட்டது. சீனா உய்குர்களின் தனித்துவமான அடையாளத்தை அழிக்க விரும்புகிறது. இது இஸ்லாமியர்களை சீனர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதை சத்தமாக சொல்வதற்கும் சீனா ஒருபோதும் தயங்கியதோ, வெட்கப்பட்டதோ கிடையாது.  

2019 ஆம் ஆண்டில், சீனா "இஸ்லாத்தை சோசலிசத்துடன் இணக்கமாக வழிநடத்தும்" 5 ஆண்டு திட்டத்தை நிறைவேற்றியது. சீன அரசு மசூதி புனரமைப்பு பிரச்சாரத்தையும் தொடங்கியது. 11 மில்லியன் உய்குர்கள் உட்பட 22 மில்லியன் முஸ்லிம்கள் சீனாவில் உள்ளனர்.

Read Also | 1000 கோடி ரூபாய் ஹவாலா மோசடி! ஒரு சீனர் மற்றும் சிலர் மீது ED வழக்குப் பதிவு

சீனாவின் பெரும்பான்மை இனமாக விளங்கும் ஹான் சமுதாயத்தில் உய்குர்களை இணைக்க சீனா விரும்புகிறது. இந்த நோக்கத்தை அடைய எந்த அளவிற்கும் செல்ல பெய்ஜிங் தயாராக உள்ளது.  சின்ஜியாங்கில் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டது. சீன அதிகாரிகள் 1.8 மில்லியன் உய்குர்களை சிறையில் அடைத்துள்ளனர். சீனா பலரைக் கொன்று அவர்களின் உறுப்புகளை எடுத்துக் கொண்டது. உய்குர் இனப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், ஆண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது. குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பறிக்கப்படுகிறார்கள்.

சீனா தனது முஸ்லிம்கள் மீது அவர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அவர்களின் மதத்தை குறிவைத்து ஒரு போரை நடத்தி வருகிறாது. சின்ஜியாங்கில் உள்ளவர்கள் இந்த போரில் நேரடியாக ஈடுபட முடியாது. ஆனால், வெளியே உள்ளவர்கள் இந்த கொடுமைகளை செய்ய முடியும். ஆனால் சீனாவின் நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும்போது, அது சர்வதேச அளவில் முஸ்லீம் நாடுகளை தூண்ட வேண்டும், ஆனால் அவையோ வாய் மூடி மெளனம் காக்கின்றன.  
தன்னை முஸ்லீம் உலகின் தலைவராக சுயமாக நியமித்துக் கொண்ட செளதி அரேபியாவும் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக ஒற்றை வார்த்தை கூட சொல்வதில்லை. செளதிகளை விரட்டியடிக்கவும், முஸ்லீம் உலகின் சரியான தலைவராக தன்னை முன்னிலைப்படுத்தவும் விரும்பும் துருக்கி, சீனாவிலிருந்து தப்பிச் சென்றவர்களை சுற்றி வளைத்து பெய்ஜிங்கிடம் ஒப்படைத்து வருகிறது.
பாகிஸ்தானோ, சிஞ்சியாங்கில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாது என பாசாங்கு செய்கிறது. சீனாவை விமர்சிக்க மாட்டேன் என்று மலேசியா கூறுகிறது, ஏனெனில், சீனா அதன் விமர்சனங்களுக்கு சரியாக பதிலளிக்கவில்லையாம்! ஈரான் உண்மையில் சீனாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.

மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறும் உலகின் பிற பகுதிகள் சீனாவின் முஸ்லிம்கள் சீன அரசால் கொல்லப்படுவதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றன.  ஆனால் அதற்கு எதிராக விரலை உயர்த்தும் சிரமத்தைக் கூட மேற்கொள்ளத் தயாராக இல்லை. உலகம் தனது மனசாட்சியை அடமானம் வைத்துள்ளதால் தான், சீனா மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு கழிப்பறையைக் கட்டியுள்ளது.

Read Also | கராச்சியில் சீன போர்க்கப்பல்களுடன் பாகிஸ்தானின் submarine நிறுத்தப்பட்டது ஏன்?

Trending News