அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் (Joe Biden) நேற்று பதவியேற்றார். கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். அப்போது ஜோ பைடன் ஆற்றிய உரை பரவலாக பாராட்டப்பட்டது. அவர் அளித்த உரை பரவலான பாராட்டை பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க வரலாற்றாசிரியரான மைக்கேல் பெஷ்லோஸ், அமெரிக்க ஜனாதிபதியின் உரை 'அடக்கமான, ஆழமான, வெளிப்படையான, ஊக்கமளிக்கும் உரை என குறிப்பிட்டுள்ளார்.ஒற்றுமை, ஜனநாயகம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உரை என பலரும் பாராட்டியுள்ளனர்.


அனைவரையும் கவர்ந்த உரையின் சில மேற்கோள்கள்


"இது அமெரிக்காவின் நாள், இது ஜனநாயக நாள், வரலாறு மற்றும் நம்பிக்கையின் நாள். இன்று நாம் ஒரு வெற்றியைக் கொண்டாடுகிறோம், இது ஒரு வேட்பாளரின்  வெற்றியல்ல. ஜனநாயகம் விலைமதிப்பற்றது. இன்று, என் நண்பர்களே, ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது" என தனது உரையில் ஜோ பைடன்  (Joe Biden) குறிப்பிட்டார்


"ஒரு கலகக்கார கும்பல் வன்முறையைப் பயன்படுத்தி மக்களின்  தேர்வை தோற்கடிக்கவும், நமது ஜனநாயகத்தை குலைப்பதற்கும்,  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது நடக்கவில்லை. அது ஒருபோதும் நடக்காது. " என்றார்.


ஜோ பைடன் தனது உரையில் "அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஆன அதிபராக இருப்பேன்"  என்றும் வலியுறுத்தினார்,


ஊடகத் துறையை சேர்ந்த பலரும் பிடனின் பேச்சைப் பாராட்டினர், இந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு (America) மிகவும் தேவையான ஒன்றை அவர் வழங்கினார் என்று கூறினார்.


ALSO READ | அமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்...


உலகளவில் மக்களால் பரவலாகப் பாராட்டப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் தொடக்க உரை இந்திய அமெரிக்கரான வினய் ரெட்டி அவர்கள் எழுதியது.


ஓஹியோவின் டேட்டனில் வளர்ந்த ரெட்டி, முன்னர் இரண்டாவது முறையாக அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் இருந்தபோதும், அவரது உரையை எழுதும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவர் தற்போது ஜோ பைடன்-ஹாரிஸ் இருவருக்கும் அவர்கள் ஆற்றும் உரையை தயாரிக்கும் பணியில் உள்ளார், மேலும் 2020 தேர்தலுக்கான பைடன்-ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த ஆலோசகராகவும், இருந்தார்.


ALSO READ | மவுனம் கலைத்த மெலினியா டிரம்ப்... US Capitol வன்முறை குறித்து கூறியது என்ன..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR