ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த நாடாளுமன்றம் சென்ற புதன்கிழமை அன்று கூடியதை அடுத்து, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை கேபிடல் அணிவகுத்துச் செல்லுமாறு டிரம்ப் அறிவுறுத்தினார். இதனால் குழப்பம் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.
இதை அடுத்து, அவருக்கு எதிராக கண்டன குரல்கள் ஒலித்தன. மேலும் அவருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி, அவர பதவி நீக்கம் செய்ய ஜனநாயக கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வரும் ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் (Joe Biden) பதவி ஏற்க உள்ளார். டிரம்ம்பின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களில், முடிவைந்து விடும். ஆனால், டிரம்ப் ஜனநாயத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என கூறி, அமெரிக்க நாடாளுமன்ற நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி, அவர் விரைவில் பதிவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
ALSO READ | அதிபர் டிரம்ப் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: சபாநாயகர் நான்ஸி பெலோஸி
வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. அதிபர் ட்ரம்பின் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் (Twitter) விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், தனது மவுனத்தை கலைத்த மெலினியா டிரம்ப் (Melania Trump), அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவம் தனது மனதை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அவர், நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து, தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மிகவும் இழிவாக பேசப்பட்டதாகவும் கூறினார். இந்த சம்பவத்தை சொந்த லாபத்திற்காக யாரும் பயன்படுத்தக் கூடாது என்றார்.
ALSO READ | இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தாக்கிய இந்திய கப்பல்... சுவாரஸ்யமான தகவல்கள்..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR