Kuwait Mangaf Building Fire Accident : நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குவைத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பயங்கர தீ விபத்து. இதில்,45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில், உயிரிழந்தவர்களில் 23 பேர் கேரளாவை சேர்ந்தவர்களாகவும், 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். குவைத்தின் மாங்காஃப் நகரில் அமைந்திருக்கும் 7 மாடி குடியிருப்பில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீ விபத்து ஏற்பட்டது எப்படி? 


குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கின்றனர். குவைத் தீயணைப்புத் துறையின் விசாரணைத் தலைவர் கர்னல் சயீத் அல்-மௌசாவியின் தலைமையில் தீ விபத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தரை தளத்தில் தங்கியிருந்த எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரின் கேஸ் சிலிண்டரில் இருந்து, வாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 


உயிரிழந்த 7 தமிழர்கள்:


>கே.ராமு. இவருக்கு 65 வயதாகிறது. 2 வருடங்களாக ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி இந்தியா திரும்புவதற்காக டிக்கெட் எடுத்திருக்கிறார். தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு திரும்ப இருந்த இவர், தீ விபத்தில் உயிரிழந்திருக்கிறார். 


>வீராச்சாமி மாரியப்பன். இவர், தூத்துக்குடியை சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர். இவர் குவைத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறார். 


>எபமேசன் ராஜு. இவர் திருச்சியை சேர்ந்தவர். 53 வயதாகும் இவர், துபாயின் என்பிடிசி நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுநராக இருந்துள்ளார். இவரது உடல் தாமதமாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டது. 


>கே.சின்னதுரை, இவர் கடலூரை சேர்ந்தவர். 42 வயதாகும் இவர் 4 வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கே சென்று அங்கேயே தங்கி விடலாம் என முடிவு செய்திருக்கிறார். ஆனால், இவர் குழந்தை இறந்த பிறகு வாழ்விலேயே பிடிமானம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால், 5 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் குவைத்திற்கு திரும்பியிருக்கிறார். 


>கோவிந்தன் சிவசங்கர். இவர் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு 2 வருட ஒப்பந்தத்தின் பேரில் இவர் குவைத்திற்கு சென்றிருக்கிறார். 


>புனாஃப் ரிச்சர்ட் ராய், இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர். 28 வயதாகும் இவர், என்பிடிசி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு முதல் தர ஆய்வாளராக இருந்துள்ளார். 


>மொஹமத் ஷரீஃப், விழுப்புரத்தில் இருக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் இவர். கடந்த 12 வருடங்களாக குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். 


மேலும் படிக்க | குவைத் தீ விபத்து தமிழர்கள் நிலை என்ன? நேரடி ரிப்போர்ட்


குவைத் தீ விபத்து ஏற்பட்டபோது, அந்த கட்டடத்தில் இருந்து உயிர் பிழைத்தோர் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர். அதில் அவர்கள் பின்வருமாறு நடந்த சம்பவத்தை விவரித்திருக்கின்றனர்.


சின்னப்பன் விஸ்வநாதன் என்பவர் அளித்துள்ள பேட்டி: “காலையில் 4:30 மணி இருக்கும். நான் நன்றாக உறங்கி கொண்டிருந்தேன். திடீரென்று அலறல் சத்தம் கேட்டு கண் விழித்தேன். என்னை சுற்றி ஒரே புகையாக இருந்ததால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மக்கள் பலர் பயத்துடன் அலறி ஓடிக்கொண்டிருந்தனர். நானும் என் அறையில் இருந்தவர்களும் வெளியில் போக வேண்டாம் என்று நினைத்து உள்ளேயே இருந்தோம். தீயணைப்பு துறையினர் வந்து அழைத்த பின்புதான் கதவை திறந்தோம்.” என்று கூறியிருக்கிறார். 


சந்தோஷ் குமார் என்பவர் அளித்துள்ள பேட்டி: “கட்டடம் தீயில் இருந்த போது எனக்கு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. நான் முதல் மாடியில் உறங்கி கொண்டிருந்தேன். தீ விபத்தின் போது ஜன்னலை உடைத்து தப்பித்து வெளியில் வந்தேன். 3-4 பேர் சேர்ந்துதான் ஜன்னலை  உடைத்தோம். நாங்கள் உயிர் பிழைத்ததே பெரிய பாக்கியம்.”


தமிழத்தை சேர்ந்த 29 வயது ராஜேந்திரன் அளித்த பேட்டி: “நாங்கள் மூன்றாவது மாடியில் ஏசியை போட்டு உறங்கி கொண்டிருந்தோம். அதிகாலையில் எங்களுக்கு அலறல் சத்தம் கேட்டது. அது மரண ஓலம் போல இருந்தது. கூடவே கரும்புகை மண்டலத்தையும் பார்க்க முடிந்தது. உடனே ஏசியை ஆஃப் செய்து விட்டு, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளி காற்றை உள்ளே வரவிட்டோம். எங்கள் கதவு பூட்டியிருந்ததால் எங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. 


மேலும் படிக்க | குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு - குடும்பத்தினர் பேரதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ