குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு - குடும்பத்தினர் பேரதிர்ச்சி

குவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2024, 12:28 PM IST
  • குவைத்தில் ஆறு மாடி கட்டட விபத்து
  • 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
  • உதவி நடவடிக்கைகளை துரிதப்படுத்திய தமிழக அரசு
குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு - குடும்பத்தினர் பேரதிர்ச்சி title=

குவைத்தில் 6 அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உடல் கருகியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். சிலர் உடல் தீயில் கருகிவிட்டதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதில், ராமநாதபுரம் மாவட்டம், தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவரும் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. அவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும் படிக்க | பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 இந்த நிலையில் குவைத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் இறந்து போன கட்டிடத்தில் இவரும் தங்கி இருந்ததாக தெரிகிறது. அவர் தீ விபத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாகவும் அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவல்களால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மனைவி குருவம்மாள், மகன் சரவணக்குமார் ஆகியோர் கதறி அழுது சோகம் அடைந்துள்ளனர். இந்திய துணைத்தூதரம் மற்றும் வெளியுறவுத்துறை உடனடியாக விசாரணை நடத்தி அவரது உடலை தாயகம் கொண்டு வரவும், உரிய இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தெரிந்துகொள்ள இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற உதவி எண்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல் மத்திய அரசும் குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. குவைத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் உத்தரவிட்டுள்ளனர்,

மேலும் படிக்க | அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News