மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயிலுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன; காலிஸ்தானிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடக்கு புறநகர்ப் பகுதியான கிரேகிபர்னில் உள்ள காளி மாதா மந்திருக்கும் பஜனை மற்றும் பூஜை நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தொலைபேசியில் மிரட்டல் அழைப்பு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 18-ம் தேதி வரும் மகாசிவராத்திரி திருவிழாவை அமைதியாக அனுசரிக்க விரும்பினால் காலிஸ்தானிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலுக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் நேற்று (2023 பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை) வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


இந்திய எதிர்ப்பு மனோபாவத்தால்,ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் "காலிஸ்தானி ஆதரவாளர்களால்" மூன்று இந்து கோவில்களில் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் நடைபெற்றதை அடுத்து. பிரிஸ்பேனில் உள்ள காயத்ரி மந்திருக்கு மிரட்டல் அழைப்பு வந்தது.


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: இந்த ராசிகளுக்கு சிவனின் அருளால் பணம், வேலை, வியாபாரத்தில் பம்பர் பலன்கள்


காயத்ரி மந்திர் தலைவர் ஜெய் ராம் மற்றும் துணைத் தலைவர் தர்மேஷ் பிரசாத் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை தனித்தனியாக இந்த மிரட்டல் அழைப்புகள் வந்தன. 'குருவாதேஷ் சிங்' என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து, "காலிஸ்தான் வாக்கெடுப்புக்கு" இந்து சமூகம் ஆதரவளிக்கக் கோரியதாக, தி ஆஸ்திரேலியா டுடே பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பில் இருந்து தான் அழைப்பதாகக் கூறிய இந்திய எதிர்ப்பு ஆதரவாளர், 'காலிஸ்தான் பொது வாக்கெடுப்புக்கு' இந்து சமூகத்தை ஆதரிக்குமாறு கோயில் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
  
"காலிஸ்தான் தொடர்பாக என்னிடம் ஒரு செய்தி உள்ளது... நீங்கள் மகா சிவராத்திரியை கொண்டாட திட்டமிட்டால்.... உங்கள் நிகழ்வின் போது காலிஸ்தானுக்கு ஆதரவாக 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை 5 முறை எழுப்புமாறு கோவில் பூசாரியிடம் சொல்லுங்கள்... நீங்கள் எப்படி கோஷம் போடுவீர்கள் என்று இப்போதே காட்டுங்கள்" என்று கோவிலின் தலைவருக்கு மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.  


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகம்’!


இந்த மிரட்டல் அழைப்பு குறித்து பேசிய பிரசாத், மத தலங்களுக்கு எதிரான வன்முறை மிகப்பெரிய குற்றம் என்றும், “இந்துக்களாகிய நாம் பயமின்றி நமது மதத்தை பின்பற்ற முடியுமா? என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.


பின்னர், இந்த மிரட்டல்கள் தொடர்பாக பேசிய கோயிலின் மக்கள் தொடர்பு அதிகாரி நீலிமா, அமெரிக்க எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்ததாகக் கூறினார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் "காலிஸ்தானி ஆதரவாளர்களால், "இந்திய-எதிர்ப்பு வெறுப்பு அவ்வப்போது வெளிவருவதாகவும், ஆஸ்திரேலியாவில் மூன்று இந்துக் கோவில்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு காயத்ரி மந்திருக்கும் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுவதாக" தெரிவித்தார்.


மேலும் படிக்க | Maha Shivratri: சிவனை துதித்தாலும் விரதத்தின்போது இந்த எச்சரிக்கைகளை மறக்கவேண்டாம்


முன்னதாக, மெல்போர்னின் வடக்கு புறநகர்ப் பகுதியான கிரேகிபர்னில் உள்ள காளி மாதா மந்திருக்கும் பஜனை மற்றும் பூஜை நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் அழைப்பு வந்தது. 


ஜனவரி 23 அன்று, மெல்போர்னின் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயில் ISKCON)கோவிலின் நிர்வாகத்தினர், இந்துஸ்தான் முர்தாபாத் என்று சுவற்றில் எழுதப்பட்டிருப்பதாக புகார் அளித்தார்.  


ஜனவரி 16 ஆம் தேதி, விக்டோரியாவில் உள்ள கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில் மற்றும் ஜனவரி 12 அன்று, மெல்போர்னில் உள்ள ஸ்வாமிநாராயண் கோவில் என சில கோவில்களில் 'சமூக விரோதிகளால்' இந்திய எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ