மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’!

மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம். இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2023, 11:18 PM IST
  • மஹாசிவராத்திரி திருநாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.
  • ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.
  • வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’! title=

மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம். இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். சிவனுக்குரிய மஹாசிவராத்திரி திருநாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மகாசிவராத்திரியில் விரத வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ப பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும். நாம் சிவனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும். மஹா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேஷ ராசி

மகாசிவராத்திரி தினத்தில் வெல்லம் கலந்த நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்து, படைத்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதனால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியினர், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

மிதுன ராசி

மிதுன ராசியினர் சிவலிங்கத்திற்குக் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய உங்கள் மனதில் இருக்கும் பல்வேறு ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி

கடக ராசியினர் சக்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். பின்னர் மந்தாரைப் பூவால் அலங்காரம் செய்ய நினைத்தது விரவில் நடக்கும்.

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: இந்த ராசிகளுக்கு சிவனின் அருளால் பணம், வேலை, வியாபாரத்தில் பம்பர் பலன்கள்

சிம்ம ராசி

சிம்ம ராசியினர் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி ராசி

கன்னி ராசியினர் பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்யவும். இதனால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம் ராசி

துலாம் ராசியினர், பசும்பாலால் அபிஷேகம் செய்ய செல்வ செழிப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினர் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் நல்லது.

தனுசு ராசி

தனுசு ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தை படித்தல் வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி

மகர ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் நல்லெண்ணெய் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ பழத்தை படைத்தல் வேண்டும். இதனால் வாழ்வில் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியினர் இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய உங்களுக்கு நிதி வருவாயில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும்.

மீன ராசி

மீன ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News