Bizarre News: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் 40 வயதான சமிஹ் ஷின்வே, தனது கால் ஏக்கர் ஓக்ஸ், பிர்ச்ஸ் மற்றும் மேப்பிள்ஸ் மரங்கள் ஆகியவற்றை அவரது அண்டை வீட்டாரான கிராண்ட் ஹேபர் வெட்டிவிட்டதாக கூறினார். "இது என் இதயத்தையே நொறுக்கிவிட்டது. இது என்னை கோபப்படுத்துகிறது. இந்த மரங்கள் வளர மிக நீண்ட நேரம் எடுக்கும்" ஷின்வே உருக்கமாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹேபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வெட்டப்பட்ட மரத்திற்கு 32 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல் 1,000 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, அவர் சட்டவிரோதமாக அகற்றப்பட்ட மரங்களை "போன்ற அல்லது உயர்ந்த இனங்கள்" மரங்களை கொண்டு அதற்கு மாற்றை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கூடுதலாக, ஷின்வே கூறுகையில், ஹேபர் அந்த பகுதியில் மண்ணைச் சேர்ப்பது, ஆக்கிரமிப்பை அகற்றுவது மற்றும் சுத்தம் செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும், இதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பற்றி எரியும் பிரான்ஸ்! எமர்ஜென்சிக்கு காரணம் என்ன? ஆணவக் கொலைகளும் வன்முறைகளும்


இரு அண்டை வீட்டாருக்கும் இடையேயான சண்டை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது. இதுகுறித்து ஷின்வே கூறியதாவது,"ஒருநாள் தூரத்தில் பல மரம் அறுக்கும் இயந்திரங்களின் சத்தம் கேட்டது. எனது நான்கு சக்கர வாகனத்தில் ஏறி என் இடத்திற்கு சென்றேன்.


அந்த இடத்தை அடைந்ததும், 20 முதல் 150 வயது வரையிலாான வெட்டப்பட்ட மரங்களை கண்டேன், அனைத்தும் இயந்தரத்தால் வெட்டப்பட்டது. "நான் மரங்களை பெரியளவில் துண்டாக்கும் இயந்திரம், இரண்டு டிரக்குகள் மற்றும் நான்கு ஒப்பந்தக்காரர்கள் என் இடத்தில் பார்த்தேன். இதுகுறித்து கேட்டதற்கு, அவர்கள் சொன்னார்கள், உரிமையாளர் (ஹேபேர்) மரங்களால் மறைக்கப்பட்டிருந்த நகரம் மற்றும் மலைத்தொடர்களை வீட்டில் இருந்தபடி பார்க்க விரும்பியதால் வெட்டியதாக சொன்னார்கள்" என்றார்.


மரத்தை வெட்டுபவர்கள் அந்த இடத்திற்கு எல்லையாக போடப்பட்டிருந்த வேலியின் மீது ஏறி இருந்ததாக ஷின்வே கூறினார். பின்னர் அவர் போலீசாரை அழைத்தார், அவர்கள் தொழிலாளர்களை உடனே நிறுத்தும்படியும் கூறியுள்ளார்.


"நான் உண்மையில் காடுகளின் மீது அக்கறை கொண்டுள்ளேன். அதனால்தான் நான் மிகவும் கோபமடைந்தேன்," என்று அவர் கூறினார். 32க்கும் மேற்பட்ட மரங்கள் உண்மையில் அவரது நிலத்தில் வெட்டப்பட்டதாக வலியுறுத்தினார். "40 மரங்களை வெட்டி எக்காரணம் கொண்டும் வீணாக்காமல் விடுவது பைத்தியக்காரத்தனம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்" என்று ஷின்வே மேலும் கூறினார்.


இப்போது, ஹேபர் குறைந்தது 32 சட்ட விரோதமான மரங்களை அகற்றுதல் மற்றும் ஒரு அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். மரத்தை வெட்டுவதற்காக ஹேபரால் பணியமர்த்தப்பட்ட இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கும் கூடுதலாக 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படலாம்.


மேலும் படிக்க | ஜிப்லைனில் சென்ற சிறுவன்... திடீரென கட்டான கயிறு - 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த வீடியோ வைரல்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ