பற்றி எரியும் பிரான்ஸ்! எமர்ஜென்சிக்கு காரணம் என்ன? ஆணவக் கொலைகளும் வன்முறைகளும்

Paris Traffic Police Atrocity: நாட்டில் அவசர நிலை, 800க்கும் மேற்பட்டோர் கைது, 200 போலீசார் காயம், இந்த ஐரோப்பா நாடு ஏன் எரிகிறது? கடமை தவறினால் என்ன நடக்கும்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 1, 2023, 07:07 AM IST
  • போக்குவரத்து விதியை மீறினால் சுட்டுக் கொல்லலாமா?
  • பிரான்சில் தொடரும் போராட்டங்கள்
  • ஒரேயொரு போக்குவரத்து காவலரின் தவறால் எமர்ஜென்சியில் பிரான்ஸ்
பற்றி எரியும் பிரான்ஸ்! எமர்ஜென்சிக்கு காரணம் என்ன? ஆணவக் கொலைகளும் வன்முறைகளும் title=

ஐரோப்பாவின் அமைதியான நாடுகளில் ஒன்றாஅன பிரான்சில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு, 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட காரணம் என்ன?இந்த ஐரோப்பா நாடு ஏன் பற்றி எரிகிறது தெரியுமா? போராட்டக்காரர்களை தடுக்க பிரான்ஸ் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வரும் நிலையில், வன்முறையில் 200 போலீசார் காயம் அடைந்துள்ளனர். பிரான்சில் நடக்கும் கலவரங்களின் பின்னணி அதிர்ச்சியளிக்கிறது.  

கடமை தவறினால் என்ன நடக்கும்? அதிகார துஷ்பிரயேகத்தின் எதிர்வினை என்ன? ஒரேயொரு போக்குவரத்து காவலரின் தவறால் தத்தளிக்கும் நாட்டில் கலவரம் கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரிகிறது.

பற்றி எரியும் பிரான்ஸ்

மூன்று நாட்களாக வன்முறையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிரான்ஸ் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், போலீசார் திணறி வருகின்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மூன்று நாட்களுக்கு முன்பு 17 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்செய்தி தெரிந்தவுடன் பாரிஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.

போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டன. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததோடு, தீ வைத்தனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியும் உள்ளனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, 875 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 200 போலீசார் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை! அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

பிரான்ஸ் ஏன் எரிகிறது?

கடந்த செவ்வாயன்று (2023, ஜூன் 27), 17 வயதான நஹெல் என்ற இளைஞன், போக்குவரத்து சோதனையின் போது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கொலை தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதுடன், மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்டது யார்?

அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நேல் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது மெர்சிடிஸ் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, போக்குவரத்து விதிகளை மீறியதால், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார். இது மக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியுள்ளது.

போக்குவரத்து விதியை மீறினால் சுட்டுக் கொல்லலாமா?

போக்குவரத்து விதியை மீறினால் சுட்டுக் கொல்லலாமா? என்ற கேள்வி, இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரையும் சீற்றமடையச் செய்துள்ளது.  மக்களின் தொடர் போராட்டங்கள், நாடு முழுவதும் பரவிவிட்டது.

நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பதின்ம வயதினரை வீட்டில் வைத்திருக்கும்படி பெற்றோரை வலியுறுத்திய மேக்ரான், பிரான்ஸ் முழுவதும் பரவி வரும் கலவரத்தை தடுக்க, சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறார்.

மேலும் படிக்க | டைட்டானிக் பக்கத்திலேயே நொறுங்கி கிடந்த டைட்டன்! - ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

சமூக ஊடகங்களுக்கு தடை

இந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் செயல்களைத் தூண்டுவதில் Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார். அமைச்சர்களுடனான இரண்டாவது அவசர சந்திப்பிற்குப் பிறகு, இம்மானுவேல் மக்ரோன் இதனைத் தெரிவித்தார்.

மிக முக்கியமான உள்ளடக்கத்தை (இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ) அகற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து தனது அரசாங்கம் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

போலீஸ் காவலில் 875 பேர் 

இச்சம்பவத்திற்குப் பிறகு பிரான்சில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தது மற்றும் பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன, மூன்றாவது நாள் இரவும் போராட்டங்கள் தொடர்ந்தன. கைது செய்யப்பட்ட 875 பேரில் பாதி பேர் பாரிஸ் பகுதியை சேர்ந்தவர்கள் என்று பிரான்சின் தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 2671இல் இருந்து 2023க்கு வந்த டைம் டிராவலர்? - அடுக்கடுக்காக வெளியிடும் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

ஆணவக் கொலைகளும் வன்முறைகளும்

போலீஸாரின் கூற்றுப்படி, எதிர்ப்பாளர்கள் Clichy-sous-Bois புறநகரில் உள்ள நகர மண்டபத்திற்கு தீ வைத்தனர் மற்றும் Aubervilliers இல் உள்ள பேருந்து நிலையத்திற்கு தீ வைத்தனர். பாரிஸின் பல பகுதிகளில், பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் குழுக்கள் பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது.

நகரின் 12வது வட்டாரத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் தாக்கப்பட்டது, ரிவோலி தெரு, லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும் மத்திய பாரிஸின் மிகப்பெரிய வணிக வளாகமான ஃபோரம் டெஸ் ஹால்ஸ் ஆகியவற்றில் சில கடைகள் சூறையாடப்பட்டன.

போலீசார் நடவடிக்கை

மார்சேயில், நகரின் மையத்தில் வன்முறைக் குழுக்களைக் கலைக்க போலீஸார் முயன்றதாக பாரிஸ் போலீஸார் கூறியுள்ளனர். பாரிஸ் பொலிஸ் தலைமையகத்தின் கூற்றுப்படி, போராட்டங்களைக் கட்டுப்படுத்த சுமார் 40,000 போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட போலீசார் காயம்

சுமார் 200 போலீசார் காயமடைந்துள்ளதாக கூறபப்டுகிறது. இதனிடையே, வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை சம்பவங்களுக்கு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நஹலின் தாய், மௌனியா எம்., தனது ஒரே குழந்தையைக் கொன்ற காவல்துறை அதிகாரி மீது தனக்கு கோபம் இருப்பதாக பிரான்ஸ் 5 தொலைக்காட்சியிடம் கூறினார். என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய அவர், ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து நம் குழந்தைகளை சுட முடியாது, நம் குழந்தைகளின் உயிரை எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஜிப்லைனில் சென்ற சிறுவன்... திடீரென கட்டான கயிறு - 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News