உலக முழுவதும் கொரோனா பரவல் இன்னும் கட்டுபாட்டிற்குள் வராத நிலையில்,  சீனாவின் அண்டை நாடாக இருந்து வந்த போதிலும், மங்கோலியா, கொரோனா தொற்று பரவலை மிகவும் கட்டுக்குள் வைத்து வருகிறது. உள்ளூர் நிலையில் பரவியதாக,  கொரோனாவின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட பின், நாடு முழுவதும் லாக் டவுன் விதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் நிலையில் பரவிய முதல் கோவிட் -19 ( COVID-19) உள்ளூர் நிலையில் பரவிய முதல் கோவிட் தொற்று மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட பின், அங்கு நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று ( Corona virus) மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட பின், அங்கு நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது


கோவிட் தொற்று ஏற்பட்ட  நபருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் அடையாளம் காண லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் யங்கு சோட்பாதர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


மங்கோலியா அரசாங்கம் நாடு தழுவிய லாக்டவுனை (Lockdown) மேலும் இரண்டு வாரங்களுக்கு டிசம்பர் 1 வரை நீட்டித்துள்ளது. நாட்டில் உள்ளுர் நிலையில்  முதல் தொற்று பரவல் கண்டறியப்பட்ட பின்னர், மங்கோலியா வியாழக்கிழமை காலை 6 மணி முதல் தேசிய அளவில் லாக்டவுனை செயல்படுத்தியது.


உள்ளூர் நிலையில் கோவிட்  19 தொற்று ஏற்பட்ட நபர் 29 வயதான மங்கோலிய போக்குவரத்து துறையில் உள்ள ஓட்டுநரின் மனைவி ஆவர். நவம்பர் 6 ஆம் தேதி, 21 நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட டிரைவர் ரஷ்யாவிலிருந்து அல்தான்புலாக் எல்லைப் பகுதி வழியாக வீடு திரும்பினார், இங்கு வந்த பிறகு, அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், தொற்று இருப்பது உறுதியானது.


துணை பிரதமர் யாங்கு சோட்பாதர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், கோவிட் பாசிட்டிவ் நபருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் அடையாளம் காண லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஆசிய நாடான மங்கோலியாவில் 428 கோவிட் -19 தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 


இது வரை கொரோனா தொற்று காரணமாக எவரும் இறக்கவில்லை. 


ALSO READ | வெள்ளை மாளிகையில் நிரந்தர வேந்தன் நான் தான் என்கிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR