தாய்லாந்தின் புதிய கஞ்சா கொள்கையால் நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
Cannabis in Thailand: கஞ்சாவுக்கு உலக அளவில் இருக்கும் பிரம்மாண்டமான தேவைகளை பணமாக்க முயற்சிக்கும் தாய்லாந்தில் உள்ள தொழில்முனைவோர்...
Cannabis in Thailand: தாய்லாந்தில் மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதன் விளைவாக அந்த நாட்டின் சுற்றுலாவில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகள் தாய்லாந்தில் களைகட்டியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் களிப்புடன் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மரிஜூவானாவை மருத்துவ பயன்பாட்டிற்காக சட்டபூர்வம் ஆக்கிய தாய்லாந்து, இந்த ஆண்டு, அதை பயிரிடுவது மற்றும் பிரித்தெடுத்தலுக்கு இருந்த தடையை நீக்கியது.
மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் மருஜூவானாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது உல்லாச பிரியர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாகிவிட்டது.
சுற்றுலாத்துறையில் முன்னேற்றம்
சுற்றுலாவுக்காக தாய்லாந்துக்கு சர்வதேச நாடுகளில் இருந்து மக்கள் வருவதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தந்துள்ளனர்.
அதாவது, கஞ்சா தொடர்பான தாய்லாந்தின் கொள்கையின் தாக்கம் அந்நாட்டின் சுற்றுலாத்துறையில் உடனடியாக எதிரொலித்தது. தாய்லாந்தில் சுற்றுலாத்துறையின் மதிப்பு$52.63 பில்லியன் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பயன்பாட்டிற்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான மிகப்பெரிய ஆதரவு கொடுத்த தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், ஐந்து ஆண்டுகளில் சந்தை $ 3 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.
மேலும் படிக்க | GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்
கஞ்சா பொருட்கள்
மரிஜுவானா சட்டப்பூர்வமாக்கப்பட்டதிலிருந்து, தாய்லாந்தில் உள்ள தொழில்முனைவோர், கஞ்சாவுக்கு உலக அளவில் இருக்கும் பிரம்மாண்டமான தேவைகளை பணமாக்க முயற்சிக்கின்றனர், அதன் எதிரொலியாக தாய்லாந்தில் இப்போது, கஞ்சா பயன்படுத்த தின்பண்டங்கள், சோப்புகள், தேநீர் மற்றும் பற்பசை என வெவ்வேறு விதமான பொருட்கள் கிடைக்கின்றன. இதுபோன்ற பொருட்களை இந்தியாவில் நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்.
விதிமுறைகள்
தாய்லாந்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, நாட்டில் அனைவராலும் வரவேற்கப்படுகிரது. ஆனால், தங்கள் நாட்டின் கஞ்சா தளர்வுக் கொள்கையானது மருத்துவ நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது இல்லை என்றும் தாய்லாந்தின் சுற்றுலா ஆணையம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
தற்போது கஞ்சா விற்பனை செய்யும் கடைகளுக்கான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் புதிய மசோதா குறித்து தாய்லாந்தில் தற்போது விவாதங்கள் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க | என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ