Massive fire Erupt: இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
இந்தோனேசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, 20 பேர் காயமடைந்தனர். உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நள்ளிரவுக்குப் பிறகு தீ பற்றி எரியத் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக இந்தோனேசிய அரசு எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, 20 பேர் காயமடைந்தனர். உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நள்ளிரவுக்குப் பிறகு தீ பற்றி எரியத் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக இந்தோனேசிய அரசு எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்களன்று (மார்ச் 29) தீவிபத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்தோனேசிய அரசு எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா தனது பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியுள்ளதாகக் கூறியது.
நாளொன்றுக்கு 125,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யக்கூடிய பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீப்பிழம்புகள் எழுவதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் (Videos) காட்டுகின்றன.
Also Read | 2021 இல் 40 புதிய அனிமேஷன் சீரியல்களை Netflix அறிமுகப்படுத்தும்
உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நள்ளிரவுக்குப் பிறகு தீ தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தீக்கான காரணம் தெரியவில்லை, ஆனால் இந்த விபத்தின் போது பலத்த மழை மற்றும் மின்னல் ஏற்பட்டது" என்று நிறுவனம் மேலும் கூறியபோது, மேலும் பரவாமல் தடுக்க "oil flow control" நடத்துவதாகவும் கூறினார்.
பெர்டாமினா ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பெர்டாமினா எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இஃப்கி சுகர்யா (Ifki Sukarya) கூறினார்.
சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு கிடங்குகள் இருக்கும் பிரிவில் தீப்பற்றியது. ஆனால், சுத்திகரிப்பு செய்யும் ஆலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஃப்கி சுகர்யா கூறினார்.
Also Read | ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் யார்?
வீடியோக்களின் படி, திங்கள்கிழமை காலை தீ இன்னும் பொங்கி எழுவதையும், தலைநகர் ஜகார்த்தாவிற்கு (Jakarta) கிழக்கே சுமார் 225 கிமீ (140 மைல்) தொலைவில் உள்ள தளத்திலிருந்து ஒரு பெரிய கறுப்பு புகை எழுவதையும் காணலாம்.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணையை மேற்கு ஜாவா போலீசார் மேற்கொள்வார்கள் என போலீஸ் செய்தித் தொடர்பாளர் எர்டி சானியாகோ (Erdi Chaniago) ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
"நாங்கள் இந்த இடத்தை பாதுகாப்பாக கண்காணிக்கிறோம், ஏனென்றால் தீ இன்னும் நீடிக்கிறது. நிலைமையை இன்னும் சரியாக மதிப்பிட முடியவில்லை, முதலில் தீ கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார்.
Also Read | பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்
எண்ணெய் புகையின் கடுமையான வாசனை எழுந்ததாகவும், வானத்தில் மின்னல் தாக்கியதைக் கண்டதாகவும் அருகிலுள்ள குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
"முதலில் வலுவான எரிபொருள் மணத்தை உணர்ந்தோம், அதை சுவாசித்தபோது கடினமாக இருந்தது, அதே நேரத்தில் மின்னல் தாக்கியதையும் பார்க்க முடிந்தது" என்று மெட்ரோ டிவியிடம் குடியிருப்பாளர் கூறினார்.
"திடீரென்று வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது," என்று அவர் மேலும் கூறினார்.
(ஏஜென்சி உள்ளீடுகளுடன் எழுதப்பட்ட கட்டுரை)
Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR