அண்டை நாட்டு தொடர்புகளை பலப்படுத்தும் இம்ரான் கான்!
பாகிஸ்தான நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று சவுரி அரேபியா நாட்டு அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தினார்!
பாகிஸ்தான நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று சவுரி அரேபியா நாட்டு அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தினார்!
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான், பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் இன்று இஸ்லாமாபாத் நகரில் சவுதி அரேபியா தகவல் தொடர்பு மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்வாட் பின் சாலே அல்-அவ்வாட் அவர்களை சந்தித்த இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு மன்னர் முஹம்மது பின் சல்மான் உறுதியளித்துள்ளதாக இம்ரான் கானிடம் சவுதி அமைச்சர் அவ்வாட் குறிப்பிட்டுள்ளார். மேலும் சவுதி அரேபியாவிற்கு வருமாறு இன்ரான் கானுக்கு சவுதி மன்னர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனா வெளியுறத்துறை அமைச்சர் வாங்-இ இம்ரான் கானை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இவ்விரு சந்திப்புகளின்போது பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் ஷா-மஹ்மூத் குரேஷி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாட் சவுத்ரி உடன் இருந்தனர்.