உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிப்பு: குரங்கு அம்மையை உலக சுகாதார அமைப்பு (WHO) வெடிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்ற விவாதங்களுக்கு மத்தியில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை "உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  அறிவித்தார். பல காரணங்களுக்காகவும், உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல், பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், 23 ஜூலை 2022 அன்று பல நாடுகளில் பரவும் குரங்கு காய்ச்சலைப் பற்றிய சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை (IHR) அவசரநிலைக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:


மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன


பொது சுகாதார அவசரநிலையை குரங்கு அம்மை நோய் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக கடந்த மாதம் கூட்டப்பட்ட அவசரக் குழுவில், சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை இந்நோய்த் தொற்று பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று குழு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.  


அந்த நேரத்தில், 47 நாடுகளில் இருந்து 3040 குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 75 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளன.


வளர்ந்து வரும் நோய்த்தொற்றின் அபாயத்தின் அடிப்படையில், சமீபத்திய தரவை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப முடிவு எடுப்பதற்காக இந்த வாரம் வியாழன் அன்று (ஜூலை 21) குழு மீண்டும் கூட்டப்பட்டு, நோய்த் தொற்றின் ஆதாரங்கள் மற்றும் சிக்கல்களை கவனமாக பரிசீலித்தில், சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ், ஐந்து கூறுகள் பரிசீலிக்கப்பட்டன.  



முதலாவதாக, நாடுகளால் வழங்கப்பட்ட தகவல்களின்படி, இந்த வைரஸ் இதற்கு முன்னர் பரவாத பல நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இரண்டாவதாக, சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையை அறிவிப்பதற்கான மூன்று அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


மூன்றாவதாக, ஒருமித்த கருத்தை நோய்த்தொற்று எட்டிவிட்டதா என்பதை முடிவு செய்ய அவசரக் குழுவின் ஆலோசனை; நான்காவதாக, அறிவியல் கோட்பாடுகள், சான்றுகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள், ஐந்தாவது, மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்து, சர்வதேச பரவல் மற்றும் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. 



WHO இன் மதிப்பீட்டின்படி, குரங்கு அம்மை நோய் அபாயம் உலகளவில் மிதமானது மற்றும் ஐரோப்பியப் பிராந்தியத்தைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளிலும் ஆபத்து அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான ஆபத்து தற்போது குறைவாக இருந்தாலும், மேலும் சர்வதேச அளவில் பரவுவதற்கான ஆபத்தும் தெளிவாக உள்ளது.


எனவே குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அச்சுறுத்தலாக அறிவிக்கப்படுகிறது. இது எளிதான அல்லது நேரடியான செயல் அல்ல, மேலும் உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சர்வதேச சுகாதார விதிமுறைகள், நோய் சர்வதேச பரவலுக்கு பதிலளிப்பதற்கான ஒரு முக்கிய கருவியாக உள்ளது. ஆனால் இந்த முக்கிய கருவியை இன்னும் பயனுள்ளதாக மாற்ற கூர்மைப்படுத்த வேண்டும் என்பதை இந்த செயல்முறை மீண்டும் நிரூபிக்கிறது.


எனவே, தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளிப்பில் ஒரு புதிய சர்வதேச ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தும் செயல்முறையுடன், WHO இன் உறுப்பு நாடுகள் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் இலக்கு திருத்தங்களை பரிசீலித்து வருகின்றன.



சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையை நான் பிரகடனம் செய்கிறேன் என்றாலும், இப்போதைக்கு இது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே, குறிப்பாக பல பாலியல் பங்காளிகளைக் கொண்ட ஆண்களிடையே அதிகமாக இது பரவுகிறது. 


அதாவது, சரியான குழுக்களில் சரியான உத்திகளை அமல்படுத்தினால் நிறுத்தக்கூடிய பரவல் இது என்று புரிகிற்து. எனவே, அனைத்து நாடுகளும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களின் சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவது, பயனுள்ள தகவல் மற்றும் சேவைகளை வடிவமைத்து வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆரோக்கியம், மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.


நாடுகளுக்கான சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு மேலதிகமாக, எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் உட்பட சிவில் சமூக அமைப்புகளையும், இந்த சுகாதார அச்சுறுத்தலை சீர்செய்ய எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ