’நாயகன் மீண்டும் வர’ விக்ரம் பீஜிஎம்மில் சூர்யாவுக்கு குவியும் வாழ்த்து - Video

National Film Awards 2022 Surya: சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்கும் நிலையில், விக்ரம் படத்தின் ’நாயகன் மீண்டும் வர’ பாடலைக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2022, 06:29 PM IST
  • தேசிய விருது வென்றார் நடிகர் சூர்யா
  • சூர்யாவுக்கு இணையத்தில் குவியும் வாழ்த்து
  • விக்ரம் பீஜிஎம்மில் மாஸாக பரவும் வீடியோ
’நாயகன் மீண்டும் வர’ விக்ரம் பீஜிஎம்மில் சூர்யாவுக்கு குவியும் வாழ்த்து - Video title=

National Film Awards 2022 Surya: சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தியிருக்கிறார் நடிகர் சூர்யா. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான ‘சூரரைப் போற்று’, வெளியானபோதே அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும், விமர்சனத்திலும் சிறந்த படைப்பாக கருதப்பட்ட இந்தப் படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அனைவரும் என எதிர்பார்த்திருந்தனர். எத்தனை விருதுகள்? என்ற எண்ணிக்கை தான் கேள்வியாக இருந்தது.

மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து

அந்த கேள்விக்கு இன்று மாலை விடை கிடைத்தது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் ஆகிய 5 பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ’சூரரைப் போற்று’ 5 தேசிய விருதுகளை ஒருசேர தட்டிச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்த சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமில்லாமல், இந்திய திரையுலகமே வாழ்த்துகளை அனுப்பி வருகிறது.

குறிப்பாக நடிகர் சூர்யா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார். கதையின் நாயகனாகவே வாழ்ந்திருந்த அவருக்கும், அவரின் உழைப்புக்கும் கிடைத்திருக்கும் உட்சபட்ச மரியாதையாக தேசிய விருது பார்க்கப்படுகிறது. திரைப்பிரபலங்கள் ஒருபுறம் வாழ்த்திக் கொண்டிருக்க, சூர்யா ரசிகர்கள் தங்களின் அபிமான நாயகனை கொண்டாடி வருகின்றனர். அண்மையில், விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற சூர்யாவுக்கு, அதே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாயகன் மீண்டும் வர’ வெற்றிப் பாடலைக் கொண்டு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ’யாருமே சரியில்லை’ விமர்சகர்களுக்கு தேசிய விருது கொடுக்காத ஜூரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News