பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்த வழக்கில் ஜமாத் உத் தாவா தலைவர் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மத்-உத்-தவா (JuD) தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை, பயங்கரவாத நிதி தொடர்பான இரண்டு வழக்குகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதித்துள்ளது.


லாகூரில் (Lahore)  உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஹபீஸ் சயீத்தின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இது இந்த ஆண்டு ஹபீஸ் சயீத்திற்கு விதிக்கப்படும் நான்காவது தண்டனை இதுவாகும்.


ஹபீஸ் சயீத்துக்கும் நீதிமன்றம் 1,10,000 ரூபாய் அபராதம் விதித்தது. யஹ்யா முஜாஹித்துக்கும் பத்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


லாகூரில் நடந்த மற்றொரு பயங்கரவாத நிதி வழக்கில் ஹபீஸ் சயீத் தற்போது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.


ஐ.நா.வால் (UN) பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தை கண்டுபிடிப்பதில் உதவுவதற்கு, தகவல் அளிப்பதற்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் சன்மானம் அளிப்பதாக அறிவித்தது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.


மும்பை தாக்குதல் சூத்திரதாரியான ஹவீ ஸ்சயீத் (Hafeez Syed) பிப்ரவரி மாதம் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு லாகூரின் உயர் பாதுகாப்பு கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.


அமெரிக்கா (America),  ஹபீஸ் சயீத்தை "உலகளாவிய பயங்கரவாதி" என்றுஅறிவித்தது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு, 2008 டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267 இன் கீழ் சயீத் பயஙக்ரவாதி என பட்டியலிடப்பட்டார்.


மேலும் படிக்க | பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது, கண்காணிப்பு வளையத்தில் டெல்லியின் எல்லைகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR