பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பை தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2007 டிசம்பர் 27-ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்யப்பட்டார். 


இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 


இந்நிலையில், நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 2 பேருக்கு 17 வருட சிறை தண்டனையும், குற்றம் சுமத்தப்பட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராக இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரஃப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது சொத்துகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.