பப்ளிக்கில் எல்லை மீறும் தம்பதிகள்... நிர்வாணத்திற்கு `திடீரென` நோ சொன்ன அரசு!
கடற்கரை, குன்றுகள் என பொதுவெளியில் நிர்வாணகமாக நடப்பதற்கும், உடலுறவு கொள்வதற்கும் நெதர்லாந்தின் உள்ளூர் அரசு நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது. இதுகுறித்த காரணத்தை முழுமையாக காணலாம்.
தெற்கு நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரம் சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் மலை குன்றுகளில் உடலுறவு கொள்வதை தடுப்பதற்காகவும், நிர்வாணமாக திரிவதை தடுப்பதற்கும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெர்ரே முனிசிபாலிட்டி கடந்த வியாழக்கிழமை (ஜூன் 8) அன்று அதன் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வகையில், கடற்கரையோரப் பலகைகளை வெளியிட்டது. அதில், 'பொது இடத்தில் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது. குன்றுகளுக்கு செல்ல சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் குன்றுகள், கடற்கரையில் பாலியல் சார்ந்த நடவடிக்கைகளை தடுக்க அதிகரித்த கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | 16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பெண் முதலை... ஆண் இல்லாமல் கர்ப்பமான அதிசயம்!
உள்ளூர் அரசு நிர்வாகம், நீர் வாரியம் மற்றும் இயற்கை அமைப்புக்கு நிர்வாணமாக அங்கு பொழுதுபோக்க வருபவர்களால் நிகழ்த்தப்படும் பாலியல் செயல்கள் மற்றும் சில குழுக்கள் முன்கூட்டியே டேட்டிங்கை அமைக்கும் நடவடிக்கைகள் பற்றிய பல புகார்கள் ஆப்ரேஷன் ஆரஞ்செசோன் என்பதற்கு வழிவகுத்துள்ளது. அதாவது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் அர்த்தம் 'Orange Sun' என்பதாகும்.
நெதர்லாந்தின் வெர்ரே நகரத்தின் மேயர், ஃப்ரெடெரிக் ஷோவெனார் வெளியிட்ட அறிக்கையில்,"குன்றுகள் உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவை. இயற்கை சூழலை சேதப்படுத்தும் மற்றும் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விரும்பத்தகாத நடத்தைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும். அரசாங்கம் இனி எச்சரிக்கைகளை வெளியிடாது, அதற்கு பதிலாக, விரைவான வாய்மொழி அறிவிப்பது மற்றும் பார்வையாளர்களுக்கு அறிவிக்க எட்டு புதிய தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
கூடுதலாக, இயற்கை சார்ந்த அமைப்புகள், நிர்வாணமாக சன் பாத் எடுப்பதில் இருந்து பாலியல் நடத்தையை பிரிப்பது மிகவும் முக்கியமானதாக கருதுகின்றன. NFN Open en Bloot (Open and Bare) நிர்வாண பொழுதுபோக்கு சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், "பொதுவெளியில் உடலுறவு என்பது நிர்வாண பொழுதுபோக்கல்ல. மேலும் சன் பாத்திற்கு வருபவர்கள் மற்றவர்களைப் போலவே அதைத் தொல்லையாகக் காண்கிறார்கள். நிர்வாண பொழுதுபோக்கானது உண்மையானது. சுதந்திர உணர்வு மற்றும் போட்டோஷாப் செய்யப்படாத நிர்வாண உடல்களை பார்ப்பது மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் வெளியில் உடலுறவில் இருந்து விலகி இருக்கிறோம்" என்றார்.
இருப்பினும், பாலியல் உடலுறவு மீதான பழமைவாத அணுகுமுறை குறித்து பலர் குரல் கொடுத்துள்ளனர். "நெதர்லாந்து மற்றும் பிற நாடுகளில், பழமைவாத இயக்கத்தின் காரணமாக, பாலியல் மற்றும் நிர்வாணம் குறித்து உரத்த குரலைக் கொண்டிருப்பவர்கள் தற்போது பொதுவெளியில் அதனை வெளிப்படுத்த தயங்குகின்றனர். ஏனென்றால், அவர்களை பொதுவெளியில் வேடிக்கையாக்குவது டிராண்டாகிவிட்டது. இதுதான் வெளிப்புற உடலுறவுக்கு தடையை பெற்றுத் தந்துள்ளது. இது யாரை தொந்தரவு செய்கிறது? பார்க்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்பவர் டச்சுச் சட்டத்தை மீறுகிறார். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் ரீதியாக அவர்களை தடுக்கின்றனர்" என்று நெதர்லாந்தின் பாலியல் தொடர்பான மையமான ரட்ஜர்ஸில் உள்ள பாலியல் நிபுணர் யூரி ஓல்ரிச்ஸ் கூறினார்.
மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள சூப்பர்நோவாவை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ