வெலிங்டன்: நியூசிலாந்தில் (New Zealand) 102 நாட்களுக்குப் பிறகு செவ்வாயன்று ஒருவர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடன் அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆகியுள்ளது. இவர்கள் அனைவரும் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் (Isolation) அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வசதி மையங்களில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று (Corona Virus) இருப்பதாகக் கண்டறியப்பட்டவரது வயது இருவதுகளில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஜூலை 30 ஆம் தேதி மெல்போர்னில் இருந்து நியூசிலாந்திற்கு வந்தார் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


 அவர் கிராண்ட் மில்லினியத்தில் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் இருந்தார். மேலும் அவர் தங்கியிருந்த மூன்றாம் நாளில் அவரது COVID-19 க்கான பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தன. ஆனால் ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக மாறியுள்ளன. இப்போது அவர் ஆக்லாந்து தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று ப்ளூம்ஃபீல்ட் கூறினார்.


ALSO READ: கோவிட் -19 சோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது: அமெரிக்க அதிபர்


இதனுடன் நியூசிலாந்தின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த COVID-19 தொற்றின் எண்ணிக்கை 1,220 ஆனது.


எனினும் இவர்களில் யாரும் தற்போது மருத்துவமனை அளவிலான கவனிப்பைப் பெறவில்லை என்றார் ப்ளூம்ஃபீல்ட்.


 COVID-19 நோய்த்தடுப்பு செயல்முறை திட்டத்திற்கு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. எனினும் COVID-19-க்கான சரியான தடுப்பு மருந்து எது என்பது பற்றியும், அது எவ்வாறு வழங்கப்படும் என்பது பற்றியும் இன்னும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற நிலை உள்ளது.


ALSO READ: நீங்கள் கொரோனா Positive-வாக இருந்தால் இங்கு உங்களுக்குக் கிடைக்கும் 94 ஆயிரம் ரூபாய்!!