ஜகார்தா: கள்ளத்தொடர்புக்கு ஓராண்டு சிறை விதிக்கப்படும் என்று இந்தோனேசியா அரசு, புதிய குற்றவியல் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. இந்தோனேசியாவின் சர்ச்சைக்குரிய மாற்றங்களில் புதிய குற்றவியல் சட்டம் சுற்றுலாவுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்லனர். திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் நாடாளுமன்றம் செவ்வாய்கிழமையன்று திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதற்கு தடை விதித்துள்ளது, இந்தச் சட்டங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலீட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், இந்தோனேசிய நாட்டின் சட்டமியற்றுபவர்கள் ஒரு புதிய குற்றவியல் சட்டத்தை அங்கீகரித்துள்ளனர். இந்த புதிய சட்டமானது, இந்தோனேசியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதால் உலக அளவில் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


திருமணமாகாதவர்கள் ஒன்றாக வாழ்வதை தடை செய்யும் இந்த சட்டத்தில், வேறு சில தடைகளும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவின் அதிபர் மற்றும் அரசு நிறுவனங்களை அவமதிப்பது, அரசின் சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவது மற்றும் அறிவிக்கையின்றி போராட்டங்களை நடத்துவது போன்றவற்றையும் புதிய சட்டம் தடை செய்கிறது.


திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சேர்ந்து வாழ்வதை சட்டவிரோதமாக அறிவித்துள்ள இந்தோனேசியாவின் இந்த புதியச் சட்டம், தென்கிழக்கு ஆசிய நாட்டில் சுதந்திரத்தை தடுப்பதாக இருக்கும் என்று மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்


மேலும் படிக்க | உலகத்தையே கண்காணிக்கும் சீனா! ரகசிய காவல்நிலையங்கள் மூலம் உலகை ஆட்டிப்படைக்குமா?
 
அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன


இருப்பினும், வரைவு விதிமுறைகளை செயல்படுத்த அனுமதிக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு குறியீடு நடைமுறைக்கு வராது. தற்போது, இந்தோனேசியா விபச்சாரத்தை தடை செய்கிறது, ஆனால் திருமணத்திற்கு முந்தைய உடலுறவை தடை செய்யவில்லை. நாட்டில், கொரோனா பாதிப்புக்குப் பிறகு, பொருளாதாரமும் சுற்றுலாவும் தொற்றுநோயிலிருந்து மீளத் தொடங்கும் நேரத்தில் புதிய சட்டம், "முற்றிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறை வாரியத்தின் துணைத் தலைவர் மௌலானா யுஸ்ரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


புதிய சட்டங்கள் இந்தோனேசியர்களை மட்டுமல்ல, வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு குறிப்பிபட்டுள்ளது சுற்றுலாத்துறையை பாதிக்கும். நாடாளுமன்றத்தால் ஒரு மனதாக அங்கீகரிக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டம், இந்தோனேசியா நாடு, 1946ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நடைமுறையில் இருந்த கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது.


அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கூறும் இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறை வாரியத்தின் துணைத் தலைவர் மௌலானா யுஸ்ரான், இந்த சட்டம் எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பது குறித்து நாங்கள் ஏற்கனவே சுற்றுலா அமைச்சகத்திடம் எங்கள் கவலையை தெரிவித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.


கோவிட்-19 இன் தாக்கங்களில் இருந்து தீவு மீண்டு வருவதால், விடுமுறை இடமான பாலிக்கு வெளிநாட்டு வருகையாளர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையானஆறு மில்லியனை 2025 ஆம் ஆண்டில் இந்தோனேசியா எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய சட்டம் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.  


மேலும் படிக்க | Delhi MCD Election 2022: முதல் திருநங்கை வார்டு கவுன்சிலர் போபி ஆம் ஆத்மி கட்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ