கொரோனா தொற்று பரவல் தொடங்கி கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகாலம் ஆகி விட்ட நிலையில்,  இன்று உலகம் அதன் பிடியில் இருந்து மீளவில்லை. சாமான்ய மக்கள் முதல், நாட்டில் முக்கிய தலைவர்கள் வரை அனைவரும் இதனால் நேரிடையாகவே, மறைமுகமாவோ பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து (New Zealand) பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். சமீபத்தில், நியூசிலாந்தில் Omicron சமூகப் பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு எந்த விழாவிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பங்கேற்கும் அந்த 100 பேருக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கப்பட வேண்டும். எனவே இந்த கடுமையான விதிகளைக் கருத்தில் கொண்டு, தனது திருமணத்தை தள்ளிப்போட பிரதமர் முடிவெடுத்துள்ளார்.


ALSO READ | Airstrike on Yemen: சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை! ஏமனில் 70 பேர் பலி!
பல தலைவர்கள் சாதாரண மக்களைப் போலவே வாழ்க்கையை நடத்துவதோடு,  மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அவரிடம் கேட்கையில்,  ‘நாட்டு மக்களில் நானும் ஒருத்தி. மக்களி இருந்து நான் வேறுபட்டவள் அல்ல. அவர்களில் நானும் ஒருத்தி என்ற நிலையில், நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றுநோயால் ஏதேனும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட ஒவ்வொருவரிடமும்  நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.


நியூசிலாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டதே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம். இந்த குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது தொற்று பாதிப்புன் ஏற்பட்டுள்ளது. ஒரு விமானப் பணிப்பெண் மூலம், கொரோனா தொற்று இவர்களுக்கும் பரவியது. இதற்குப் பிறகு, இது போன்ற சமூகப் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


ஆர்டன் மற்றும் அவரது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் (Clarke Gayford) தங்கள் திருமண தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் அடுத்த சில வாரங்களில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று நம்பப்பட்டது. தற்போது, ​​நியூசிலாந்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும்.


கோவிட் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, நியூசிலாந்தில் 15,104  தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதோடு, 52 பேர் இறந்துள்ளனர்.


ALSO READ | தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR