தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!

பிப்ரவரி 1 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் தாய்லாந்துக்கு செல்லலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 02:37 PM IST
  • தாய்லாந்து பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
  • தாய்லாந்தில், 24 மணி நேரத்தில் 8,129 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
  • தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணிக்கையில் ஏற்றம் காணப்பட்டது.
தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!  title=

பாங்காக்: தாய்லாந்து அடுத்த மாதம் முதல், தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தை மீண்டும் தொடங்கும் என்று நாட்டின் கோவிட் -19 பணிக்குழு அறிவித்துள்ளது.

'டெஸ்ட் & கோ' தனிமைப்படுத்தப்பட்ட விலக்குத் திட்டம் டிசம்பர் 22, 2021 முதல் இடைநிறுத்தப்பட்டது. அது துவக்கப்பட்ட ஏழு வாரங்களுக்குள்ளே இது நடந்தது. மிகவும் அதிகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டால் (Omicron Variant), தொற்று பரவல் அதிகமாக இருந்தததுதான் இதற்கு காரணம் என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் தாய்லாந்துக்கு செல்லலாம். எனினும், தாய்லாந்தில் நுழைந்தவுடன் முதல் நாளும் ஐந்தாவது நாளும் ஆர்டி-பிசிஆர் தோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை கோவிட்-19 கண்காணிப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தவீசின் விசானுயோதின் தெரிவித்தார். 

தவீசின் படி, பயணிகள் தங்கள் முன்பதிவு செய்த ஹோட்டல்களில் சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்காணிக்கும் செயலியைப் பதிவிறக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.

ALSO READ | மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திய மருத்துவர்கள்! 

தாய்லாந்தில் (Thailand) நோய்த்தொற்றுகள் சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாகக் கருதப்படுவதாகவும், அது நிலையாகி, குறையும் போக்கை நோக்கிச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மேலும் தளர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இப்போது இரவு 11 மணி வரை மதுவை வழங்க உணவகங்களுக்கு அனுமதி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நேர அளவிலிருந்து 2 மணி நேரம் அதிகமாகும். 

இருப்பினும், பார்கள் மற்றும் இரவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும்.

வியாழக்கிழமை, தாய்லாந்தில், 24 மணி நேரத்தில் 8,129 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணிக்கையில் ஏற்றம் காணப்பட்டது. மேலும் 19 பேர் இறந்ததாக CCSA தெரிவித்துள்ளது.

இன்றுவரை, நாட்டின் கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள்தொகையில் 66.4 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டுள்ளனர். 15.3 சதவீதம் பேருக்கு பூஸ்டர் ஷாட்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

ALSO READ | 'நான் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை' மனம் திறந்த ஜோ பைடன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News