வெலிங்டன்: நியூசிலாந்தில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22, 2021) அன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின்போது, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ண் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டதை உணர்ந்தும் அவர் தன் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்தார். நிலநடுக்கத்தாலும் அவரது உறுதியை அசைத்துப்பார்க்க முடியவில்லை. நிலநடுக்கத்தை ஒரு "லேசான தடங்கல்" என விவரித்த அவர், சந்திப்பை பாதியிலேயே நிறுத்த மறுத்துவிட்டார். 


ஜசிந்தா ஆர்டர்ணின் இந்த செயல் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. சமூக ஊடகங்களிலும் பலரும் இதைப் பற்றி வியந்து பாராட்டி வருகின்றனர். ஜசிந்தா, ஏற்கனவே தன்னுடைய கச்சிதமான நிர்வாகத் திறமை மற்றும், கொரோனா வைரசை அவர் கையாண்ட விதம் காரணமாக மிகவும் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


"ஒ.. மன்னிக்கவும், ஒரு சிறிய தடங்கல் - அந்த கேள்வியை மீண்டும் கேட்க முடியுமா?" என கூறிய நியூசிலாந்து (New Zealand) பிரதமர் ஆர்டன் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.


இந்த செய்தியாளர் சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கோவிட் -19 க்கு (COVID-19) எதிராக 90% மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் குறிக்கோள் பற்றிய கலந்துரையாடல்களை இந்த சந்திப்பு மையமாகக் கொண்டிருந்தது.



 



நியூசிலாந்தின் நில அதிர்வு நிறுவனமான ஜியோநெட், 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் மத்திய பகுதியில் 210 கிலோமீட்டர் ஆழத்தில் (130 மைல்கள்) ஏற்பட்டதாகக் கூறியது. இதன் அதிர்வுகள் தெற்கு நகரமான கிறிஸ்ட்சர்ச் வரை உணரப்பட்டன. 


இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ALSO READ:Viral News: செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!! 


ALSO READ:Viral Video: New Nealand MP-யாக சமஸ்கிருதத்தில் oath எடுத்து சரித்திரம் படைத்த இந்தியர் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR