கொரோனாவை சமாளிக்க இஞ்சி டீ குடியுங்கள்... வட கொரிய அரசின் உத்தரவால் மக்கள் அவதி
வெளிநாட்டு மருத்துவ உதவிகளை ஏற்க மறுத்து வரும் வட கொரிய அரசு தன் மக்களை கொரோனா நோய் தொற்றுக்கு இஞ்சி தேனீரை குடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வடகொரியாவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. நாட்டில் யாரும் தடுப்பூசி போடாததாலும், மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுவதாலும் அங்குள்ள மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
தவறான நிர்வாகத்தின் காரணமாக, நோயாளிகள் சிகிச்சைக்காக வீட்டு வைத்தியத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மூலிகை தேநீர் குடிக்கவும், உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், வடகொரியா கொரோனா பரவல் நாட்டிற்குள் வராமல் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தற்போது கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டது. அதுவும் லட்சக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், வெளி நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை நிராகரித்துள்ளார். சில ஊடக தகவல்களின்படி, வட கொரியாவின் அரசு 'காய்ச்சலுக்கு' சிகிச்சையளிப்பதற்கு பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தீவிர நோய் இல்லாதவர்கள் இஞ்சி அல்லது ஹனிசக்கிள் டீயை அருந்தலாம் என ஆளும் கட்சிப் பத்திரிகையான ரோடாங் சின்முன் அறிவுறுத்தியுள்ளது.
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு 1 மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையிலும் நாட்டின் அதிபர் வெளிநாடுகளின் உதவியை ஏற்காமல் காலம் தாழ்த்துவது மிகப்பெரிய மூடத்தனம் என உலக தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய்த விஜய் சேதுபதி
கொடிய வைரஸை தேநீர் குணப்படுத்துமா?
தொண்டை புண் அல்லது இருமல் போன்ற சில கோவிட் அறிகுறிகளை தேநீர் நீக்குகிறது, மேலும் இது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஈரபதம் தர உதவுகிறது. ஆனால் வீட்டு வைத்தியம் வைரஸைக் குணப்படுத்தாது என உலக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநில செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஆயிரக்கணக்கான டன் உப்பு நகரத்திற்குள் "ஆன்டிசெப்டிக் கரைச்சல்" செய்ய வரவழைக்கப்பட்டுள்ளது.
உப்பு நீர் வாய் கொப்பளிப்பது பொதுவான வைரஸ்கள் மற்றும் ஜலதோஷங்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் அது கொரோனா தொற்றைத் தடுக்க உதவுகிறது என்பதற்கான சான்றுகள் மிகக் குறைவு.
வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி சேனலில் இருந்து நோயாளிகளுக்கு வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்த மருந்துகள் காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளைக் குறைக்கும், ஆனால் உடலில் வைரஸ் பெருகுவதைத் தடுப்பதில் இந்த மருந்துகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதில் கவனிக்க வேண்டிய சூழல் என்னவென்றால், சரியான கொரோனா பரிசோதனை வசதி இல்லாததால், கொரோனா பரவலா? சதாரண காய்சலா? என்று கண்டுப்பிடிக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கானோர் வீட்டு மருத்துவத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR