சிறிது நாட்களுக்கு முன் உலக நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என பேசிய வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இப்போது அந்தர் பல்டி அடித்து, அமெரிக்கா தான் முதல் எதிரி என மிரட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், முன்னதாக நடைபெற்ற அரசியல் மாநாட்டில் உரையாற்றிய போது, வெளியுலத்துடன் உறவை மேம்ப்படுத்த வேண்டுமெ ந பேசியிருந்தார். உள்நாட்டில் பெரிய அளவில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில், சியோல் மற்றும் வாஷிங்டன் உடனான உறவை மேம்படுத்தும் முயற்சியாக கிம் ஜாங் உன் (Kim Jong Un) , சில நடவைக்கைகளை வெளியிடுவார் என அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிபரின் இன்றைய பேச்சு அவரது சர்வாதிகார மனம் மாறவில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டது.


அமெரிக்காவிற்கு யார் அதிபராகப் பதவியேற்றாலும் அமெரிக்கா தான் தங்கள் முதல் எதிரி என்று வட கொரிய அதிபரும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 


ALSO READ | என்ன தான் நடக்கிறது வடகொரியாவில்.. வெளியுலகத்துடன் உறவை மேம்படுத்த Kim Jong Un சபதம்..!!


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் (Joe Biden) இந்த மாதம் 20ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார். ஜோ பைடனின் வெற்றி நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.  அவர் அதிபராகப் பதவியேற்ற பின் சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா அணுகும் முறையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில், வட கொரியாவின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அறிவிக்கும் மாநாட்டில் பேசிய, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா தான் எங்களது முக்கிய எதிரி என கூறியுள்ளார், "நமது மிகப்பெரிய எதிரியாகவும், நமது புரட்சிக்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.  அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும், அந்நாட்டின் அடிப்படை கொள்கை வட கொரியாவுக்கு எதிரானதாகவே உள்ளது. அது மாறப்போவதில்லை" என தெரிவித்தார். 


அமெரிக்க அதிபராக டிரம்ப் (Donald Trump) முதலில் பதவியேற்றபோது, கிம் ஜாங் உன்னிற்கும் டிரம்பிற்கும் இடையில் மோதல் போக்குகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்தது. ஆனால்,  யாரும் எதிர்பார்க்காத வகையில், டிரம்பும் கிம்மும் சந்தித்துக் கொண்டர். அதை அடுத்து வட கொரியாவின் மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


சர்வதேச அளவில் தடைகள் இருந்தாலும் வடகொரிய அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தவில்லை. அதற்கு வட கொரியா கூறும் விளக்கம், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் எங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.


தற்போது, வட கொரியாவிடம் (North Korea) பல வகை அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் வட கொரியாவால் அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள முடியும் அளவிற்கு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


ALSO READ| மின் தடையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. ஸ்தம்பித்து போனது மக்களின் இயல்பு வாழ்க்கை..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR