அறிகுறியற்ற நபர்கள் பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுவது கவலைக்கு ஒரு முக்கிய காரணியாகி வருகின்றது. மனிதனின் இருமலின் மூலம் COVID நோய்த்தொற்றைக் கண்டறியக்கூடிய அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதனின் இருமலில் COVID நோய்த்தொற்றை சுட்டிக்காட்டக்கூடிய ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறியும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பற்றி ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பின்னர் அந்த நபர்கள் மருத்துவ உதவியை நாடலாம்.


மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) கருவி மனிதனின் இருமல் மூலம் கோவிட் -19 ஐ கண்டறிய முடியும் என்று கூறுகிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி ஆய்வுகளின்படி, அறிகுறியற்ற நபர்களின் இருமல் ஆரோக்கியமானவர்களிடமிருந்து வேறுபடலாம் என்றும், மனித காதுக்கு வேறுபாடுகள் புரியவில்லை என்றாலும், AI இவற்றைக் கண்டறிய முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களிடமிருந்து 98.5 சதவீத இருமலை AI கருவி துல்லியமாக அடையாளம் கண்டுள்ளது என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அறிகுறிகள் இல்லாத ஆனால் பின்னர் COVID-19 உறுதி செய்யப்பட்ட அறிகுறியற்ற மனிதர்களிடமிருந்து வரும் இருமல்களைப் பொறுத்தவரை, AI கருவி 100 சதவீத துல்லிய விகிதத்தைக் கொண்டுள்ளது.


பல்லாயிரக்கணக்கான இருமல் பதிவு மாதிரிகள் குறித்து AI க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்கள் இதை கூறியுள்ளார்கள்.


ALSO READ: இந்த ஆயுர்வேத மருந்தால் COVID-யை குணப்படுத்த முடியும்: AIIA ஆய்வு...!


ஆராய்ச்சியாளர் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் செயலி, மக்களை தங்கள் இருமலின் (Cough) ஒலியை தங்கள் தொலைபேசியில் பதிவுசெய்ய வைத்து, அவர்கள் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த உடனடி வழிகாட்டலை வழங்கும்.


வெவ்வேறு அளவிலான குரல் தண்டு வலிமையுடன் தொடர்புடைய ஒலிகளை வேறுபடுத்தி பிரிக்க ரெஸ்நெட் 50 எனப்படும் பொது இயந்திர கற்றல் வழிமுறையில் இது முதலில் பயிற்சி பெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பிட்ட சொற்களை சரியாக எடுக்க இது 10000 மணி நேரத்திற்கும் மேலான பேச்சு பயிற்சியுடன் பணி புரிந்துள்ளது.


இதற்குப் பிறகு, அவர்கள் நரம்பியல் நெட்வொர்க்கில் மற்றொரு இரண்டாம் நிலை பயிற்சியையும் செய்தனர். இது பெரும்பாலும் பேச்சில் தோன்றும் உணர்ச்சி நிலைகளை வேறுபடுத்துகிறது. செயலியில் செய்யப்பட்ட இறுதி கட்டம் வலுவான மற்றும் பலவீனமான இருமலுக்கு இடையில் வேறுபாடைக் காட்டும் ஒரு வழிமுறையாகும். பலவீனமான இருமல் தசை பலவீனத்தின் அறிகுறியாகும்.


ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR