டைட்டைன் நீர்மூழ்கி நிறுவனத்தின் அடுத்த பிளான் இதுதான்..! வீனஸ் கிரகத்துக்கு போலாமா?
OceanGate நிறுவனத்தின் இணை நிறுவனரான Guillermo Sohnlein, அறிவித்துள்ள அடுத்த சாகச பயணம் தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
Ocean gate நிறுவனத்தின் Titan நீர்ழூழ்கி கப்பல் நூற்றாண்ட பழமையான டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட பயணிகளுடன் சென்ற போது வெடித்து சிதறியது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ocean gate நிறுவனத்தின் CEO- ஸ்டாக்டன் ரஷ், தொழிலதிபர் ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத், பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டன் பால்-ஹென்றி நர்கோலெட் உட்பட கப்பலில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க | காதல் மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!
இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்திற்குப் பிறகு, OceanGate நிறுவனத்தின் இணை நிறுவனர் அளித்த சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த கட்ட லட்சியங்களை வெளிப்படுத்தினார். அது தான் பலரையும் வியப்படைய செய்துள்ளது. இது என்னவென்றால் 2050-ஆம் ஆண்டிற்குள் வீனஸ் கிரகத்திற்கு மக்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட "Humans to Venus" என்ற சாகச பயணம் தான். இந்த யோசனை சவாலானது தான் என்றாலும், NASA-வின் சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் இது சாத்தியம் தான் என்கிறார் அவர்.
வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஒரு சிறிய பகுதியில், அதன் மேற்பரப்பில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் மக்களை அனுப்ப திட்டமிட்டாராம்.
ஆனால் அங்கு மனித வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், guillermo Sohnlein நம்பிக்கையுடன் இருக்கிறார். விண்வெளி பயணம் மற்றும் அது தொடர்புடைய பல தடைகளை கடக்க திறமையான பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வேலை செய்வார்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்த முறை எத்தனை பேரை வீனஸ் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர் என்பது தெரியவில்லை. ஏற்கனவே பல நிபுணர்கள் எச்சரித்தும் அதனை கண்டுகொள்ளாமல், டைட்டனில் சாகச பயணம் மேற்கொண்டு அது சாகும் பயணமாக மாறியது. அடுத்து வீனஸ் பயணமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ