ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி, விமானத்தில் மாஸ்கோவிற்கு பயணம் செய்தி கொண்டிருந்தார். அப்போது அவர்  உடல் நிலை சரியில்லாமல் போய் மயங்கி விழுந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அலெக்ஸிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். காலையில் அவர் தேநீரை தவிர வேறு எதுவும் குடிக்கவில்லை.  சூடான தேநீர் மூலம் விஷம் வேகமாக உடலில் கலந்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்" என்று அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் கூறினார்.


புதுடில்லி: விமானத்தில் இருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexey Navalny ) தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறினார். அவர் மயக்கம் அடைந்ததால், விமானம் அவசரமாக ஓம்ஸ்க் என்ற இடத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு அலெக்ஸி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 44 வயதான அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் படிக்க | நகரும் மணல் திட்டுகள், பாகிஸ்தான் செல்லும் ஆடுகள்: ஜெய்சல்மீர் மக்கள் சந்திக்கும் வினோதமான பிரச்சனை


கடந்த ஆண்டு ஜூலை மாதம், கூட அலெக்ஸி போலீஸ் காவலில் இருந்தபோது விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒரு  வினோதமான ஒவ்வாமை ஏற்பட்டது. 


2017 ஆம் ஆண்டிலும், அவர் மீது சிலர் பச்சை நிறத்தில் இருந்த ஒரு ரசாயனத்தை வீசியதில், அவரது கண்ணில் பெரும் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் அவரது அலுவலகத்திற்கு வெளியே அவரது முகத்தில் இராசயனத்தை எறிந்தனர்.


மேலும் படிக்க| 52 ஆண்டுகளுக்கு பின் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள அரிய யானை மூஞ்சுறு..!!!