பாகிஸ்தானில் உள்ள அவுரஸ்காய் பழங்குடி மாவட்டத்தின் காளாயா பகுதி இன்று (வெள்ளிகிழமை) மார்க்கெட்டில் (ஜுமா பஜார்) வெடிகுண்டு அபுர்காய் வெடித்தது. பழங்குடி மாவட்டத்தின் காளாயா பகுதியில் ஒரு இமாம்பர்கா, ஷியா மதப்பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 25 பேர் கொல்லபட்டனர் என்றும்ன், 35 பேர் காயமடைந்தனர் என்றும் ஜியோ(Geo) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை ஷியா முஸ்லீம்களாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதி உள்ள சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சூழ்நிலையை சமாளிக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இந்த மாகாணத்தின் முதலமைச்சர் மெஹ்மூத் கான் கூறுகையில் "மாகாணத்தில் மக்கள் சமாதானத்துடன் வாழ்வது எதிரிகளுக்கு மகிழ்ச்சி இல்லை" என்று கூறினார்.


இதற்கு முன்பு தான் பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.