பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி; கை விரித்த வெளிநாட்டு வங்கிகள்
பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலைகளும் சாமான்யர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் எரிபொருள் நெருக்கடி: பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் எரிபொருள் சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க முடியாது என அதிர்ச்சி கொடுத்துள்ளன.
அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலைகளும் சாமான்யர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் தற்போது, எரிபொருள் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அதிகரித்து வரும் மானிய ஒதுக்கீட்டிற்கு மத்தியில், பாகிஸ்தானின் எண்ணெய் தொழில்துறை, இப்போது கச்சா மற்றும் எண்ணெய் பொருட்களின் இறக்குமதிக்காக அன்னிய செலாவணி இல்லாமல் சவால்களை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்... கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்
எண்ணெய் இறக்குமதி
எண்ணெய் இறக்குமதி செய்வதில் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்து வருவதாக பெட்ரோலியப் துறை, பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் டான் செய்திக்கு தெரிவித்தன. ஏனெனில் வெளிநாட்டு வங்கிகள் பாகிஸ்தானுக்கு நிதி வழங்க முடியாது என கைவிரித்து விட்டன. எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) கடன் வழங்க கோரி கடிதம் எழுதிய நிலையில், அதற்உ பதில் ஏதும் இல்லை.
பாகிஸ்தான் உயர் அதிகாரிகள்
பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (பிஎஸ்ஓ) மற்றும் பாக்-அரபு ரிஃபைனரி லிமிடெட் (பார்கோ) ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களைத் தவிர, அனைத்து எண்ணெய் தயாரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நிதியை முடியாமல் திணறி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் Dawn பத்திரிக்கையிடம் கூறினார்.
கடன் வழங்க மறுத்த வங்கி
பெட்ரோலியத் துறை பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சருக்கு அனுப்பிய எண்ணெய் தொழில்துறை அறிக்கை, "துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் எரிபொருள் விநியோகம் தற்போது வரையறுக்கப்பட்ட கடன் வசதிகள், உயர் பணவீக்கம் மற்றும் டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது
நலிவடையும் எரிபொருள் துறை
நிதி நெருக்கடி காரணமாக எரிபொருள் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், "இது விநியோகச் சங்கிலியை உடைக்கக்கூடும்" என அரசாங்கத்திடம் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR