அணுசக்தி வல்லமை கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தால்? பாக் பிரதமர் அச்சம்
India Pakistan War: `இந்தியாவும் பாகிஸ்தானும் போர்களில் இருந்து பாடம் கற்றுள்ளன, இப்போது நமக்குத் தேவை அமைதி`! பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் விடுத்த கோரிக்கையின் பின்னணி ஆச்சரியமளிக்கவில்லை
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான மூன்று போர்கள் மக்களின் துன்பம், வறுமையை அதிகரித்ததுடன் வேலையின்மை என பல பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வந்துள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தவறை ஒப்புக் கொள்வதுபோல, பாகிஸ்தானின் இன்றையப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மேஜையில் அமர்ந்து காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் ஷேபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
'போர்களில் இருந்து பாடம் கற்றுள்ளோம், இப்போது அமைதியை விரும்புகிறோம்' என்ற பாகிஸ்தான் பிரதமர் செய்தி, இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு சில தினங்களுக்கு முன்னதாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"இந்திய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை தீர்க்க நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது, தீவிரமான மற்றும் நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஜாதி பேரணிகளை ஏன் நிரந்திரமாக தடை செய்யக்கூடாது... உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!
ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினர் மீதான உரிமை மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களை இந்தியா மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், "இந்தியா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்ற செய்தி உலகம் முழுவதும் பரவும் வகையில், சிறுபான்மையினரின் உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டும்" என்று ஷெரீப் கூறினார்.
"இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். ஒன்றுக்கொன்று அனுசரித்து வாழ வேண்டும். நிம்மதியாக வாழ்வது, முன்னேறுவதா அல்லது பரஸ்பரம் சண்டையிட்டு நேரத்தையும் வளங்களையும் வீணாக்குவதா?” என்பது நம் கையில் உள்ளது. என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த வழக்கு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் அனுப்பியுள்ள செய்தியில், “வறுமையை ஒழிக்கவும், செழிப்பை அடையவும், கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்கவும் பாகிச்தான் அரசு விரும்புகிறது, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக எங்கள் வளங்களை வீணாக்காமல் இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
"நாம் அணுசக்தி வல்லமைக் கொண்டவர்கள், நவீன ஆயுதங்களை வைத்துள்ளோம், இந்த நிலையில் போர் வெடித்தால், என்ன நடக்கும் என்பதைச் சொல்ல யார் எஞ்சியிருப்பார்கள்?" என்று அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி வழக்கு! தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ