முதுகலை மருத்துவப் படிப்பு முடித்து, உயர் பணிகளில் இருக்கும் பாகிஸ்தானியர்களை திடீர் பணியிடை நீக்கம் செய்து சவுதி அரசு உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் மருத்துவ முதுகலை படிப்பு முடித்தவர்கள் இனி தங்களது நாட்டில் பணிபுரிய அனுமதியில்லை என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. முதுகலை படிப்பு (MS/MD) முடித்த பாகிஸ்தானியர்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் சவுதி சுகாதாரத்துறை தொடர்பான ஆணையம் நிராகரிக்கத்துள்ளது. மேலும், சவுதியில் தற்போது பணியில் இருக்கும் மருத்துவர்களை இடைநீக்கம் செய்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


விரைவில் பாகிஸ்தானிய மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் சவுதி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சவுதியில் இருக்கும் பாகிஸ்தானிய மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


சவுதியின் இந்த முடிவை விரைவில் கத்தார், ஐக்கிய அரசு அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளும் பின்பற்றும் என தெரிகிறது.