பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணமடைந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்-ன் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிக்கைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தகவல்கள் வெளயாகியுள்ளது.


68-வயதாகும் குல்சூம் நவாஸ் லண்டன் ஹார்லி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நுறையீரல் பாதிபின் காரணமாகவும் அவதிப்பட்டார் என மருத்து குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.



கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குல்சூம் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்ட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜூன் 15-ஆம் நாள் லண்டன் மருத்துவமனைக்கு இவர் கொண்டுச் செல்லப்பட்டார்.


குல்சூம் நவாஸுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவசர சிகிச்சை பிரிவிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1990-1993, 1997-1999 மற்றும் 2013-2017 ஆகிய காலங்களில் நவாஸ் செரீப் பாகிஸ்தான் பிரமராக இருந்தபோது இவர் பாகிஸ்தான் முதல் பெண்மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.