சீனாவின் இராணுவ வலிமை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.  பல இராணுவ கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமெரிக்கா சீனாவை விட பின்தங்கியிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம், பென்டகன் தனது '2020 இராணுவ சக்தி’  என்றஅறிக்கையில் எச்சரித்தது. சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது, இந்த திட்டம் 2035 க்குள் நிறைவடையும். 2049 வாக்கில், சீன இராணுவத்தை (PLA) 'உலகத் தரம் வாய்ந்த' இராணுவமாக மாற்றுவதற்கான திட்டங்களை சீனா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இராணுவ தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் முன்னேற்றம் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா (Russia) மற்றும் சீனா இரண்டின் புதிய தொழில்நுட்ப திறன் உலகின் ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவின் நிலை  பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பெண்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.


எதிர்கால போர்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் அமெரிக்கா (America) ஒரு பெரும் சக்தியாக இருக்க விரும்பினால், எதிர் கால தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவத்தை மேலும் பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெண்டகன் அறிக்கை கூறுகிறது.


மூன்று வகையான தொழில்நுட்பங்களில் ரஷ்யா மற்றும் சீனாவின் முன்னேற்றம் குறித்து அறிக்கை குறிப்பாக குறிப்பிடுகிறது. அவர்களிடம் ஹைப்பர்சோனிக் ஆயுதம் உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கடந்த ஆண்டு டிசம்பரில், ஹைபர்சோனிக் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய திறனைக் கொண்ட உலகின் ஒரே சக்தி ரஷ்யா தான் என்று கூறினார். 


ரஷ்யாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது. இவற்றை அடையாளம் கண்டறிவதும் கடினம். எதிரிகளின் ஏவுகணைகளை உடனடியாகக் கண்டறியும் வகையில் அமெரிக்கா நவீன சென்சார்களை விண்வெளியில் வைக்க முடியுமா என்பது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு வட்டங்களில் ஒரு விவாதம் நடந்துள்ளது. ஆனால் தற்போது, ​​அமெரிக்காவிடம் எந்த சூப்பர்சோனிக் ஆயுதமும் இல்லை. சீனாவும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது.


செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) குறித்தும் அமெரிக்காவின் கவலையை அதிகரித்துள்ளது. 
போர் மற்றும் இராணுவ ஆயுதங்கள் விஷயத்தில் AI ஐப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இன்னும் ஆரம்ப கட்ட விவாதங்களில் தான் உள்ளது. ஆனால் இராணுவத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை சீனா உருவாக்கி வருகிறது.
மேலும் படிக்க | ஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..!!!


உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க தேவையான தரவு, திறமை, ஆராய்ச்சி மற்றும் மூலதனம் ஆகியவற்றின் சிறந்த அமைப்பை சீனா உருவாக்கியுள்ளது. 


பென்டகன் அளித்த அடுத்த எச்சரிக்கை என்னவென்றால்,  இராணுவத்தில் பேக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பானது. அதே ஆண்டில், அமேசான் வெப் சர்வீசஸ், ஐபிஎம், டெலாய்ட் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் இராணுவ பேக் செயின் விஷயத்தில் ரஷ்யாவையும் சீனாவையும் விட அமெரிக்கா பின் தங்கினால், வ்பெரும் பாதிப்பு ஏற்படும் என ஒரு வெள்ளை அறிக்கையில் எச்சரித்தது.


இந்த விஷயத்தில் ரஷ்யாவும் சீனாவும் ஒரு பெரிய சவாலை முன்வைத்துள்ளன என்று அந்த அறிக்கை கூறியது. சைபர் அச்சுறுத்தலைத் தடுக்க பேக்செயின் தொழில்நுட்பத்தின் ஆய்வகத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. சைபர் போரின் இந்த காலகட்டத்தில், இந்த விஷயத்தில் ஏற்படும் இராணுவ பின்னடைவு முக்கியமானதாக கருதப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த நுட்பத்தின் மூலம் பாதுகாப்பு நெட்வொர்க்குகளை பாதுகாக்க முடியும்.


சமீபத்திய பென்டகன் அறிக்கையின் செய்தி என்னவென்றால், எதிர்காலத்தில் மேலே கூறப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தா விட்டால், அமெரிக்கா, உலகின் வல்லரசு என்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பிரம்மபுத்ராவில் அணைகட்ட சீனா திட்டம்... இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR