Mask-க எடுங்க டாக்டர்: நம்பிக்கையின் சின்னமாய் Viral ஆகும் குழந்தையின் Cute Photo
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் சமர் செயிப் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நம் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட்டது. இருண்ட, எதிர்மறையான எண்ணங்கள், பதட்டம் மற்றும் பயம் ஆகியவற்றின் வலையில் நம்மைத் தள்ளியுள்ளது. எங்கிருந்தாவது ஏதாவது ஒரு நம்பிக்கை கிடைக்காதா என அனைவருமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம். முகக்கவசங்களும் பல வித கட்டுப்பாடுகளும் இல்லாத நம் பழைய வாழ்க்கைக்குச் செல்ல நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த நேரத்தில், அப்படிப்பட்ட நம்பிக்கையை அளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி (Viral) வருகிறது. இது மக்களின் மனங்களைக் கவர்ந்து வருகிறது.
படத்தில், புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளங்க்குழந்தை ஒரு மருத்துவரின் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அகற்ற முயற்சிப்பதைக் காண முடிகிறது. இதை மக்கள் முகக்கவசங்கள் இல்லாத, கொரோனா வைரசிலிருந்து விடுதலைப் பெற்ற உலகின் ஒரு பிரகாசமான அறிகுறியாகப் பார்க்கிறார்கள். பலரும் இப்படத்தை அப்படித்தான் விளக்கியுள்ளார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் சமர் செயிப் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் புதிதாகப் பிறந்த குழந்தை, அவரது சிரிக்கும் முகத்திலிருந்து, அவரது முகக்கவசத்தை (Face Mask) பற்றி இழுப்பதைக் காண முடிகிறது.
"நாம் அனைவரும் விரைவில் முகக்கவசங்களை கழற்றிப்போடப் போகிறோம் என்பதற்கான அடையாளம் நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது” என்று டாக்டர் செயிப் இன்ஸ்டாகிராமில் படத்தைப் பகிர்ந்துகொண்டபோது எழுதியுள்ளார்.
இந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பலர் அதற்கு ‘நம்பிக்கையின் சின்னம்’ என்று பெயரிட்டுள்ளனர். சிலரோ இது இந்த ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் அதாவது ‘Photo of the year 2020’ என்று கூறியுள்ளனர்.
"இது 2020 இன் புகைப்படமாக இருக்க வேண்டும்," என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், "நான் பார்த்த மிக அழகான படம். விரைவில் முகக்கவசங்களை நாம் அனைவரும் அகற்றுவோம் என்ற நம்பிக்கை வருகிறது” என்று எழுதியுள்ளார்.
“எவ்வளவு அழகான, அர்த்தமுள்ள படம்… எது நமக்குத் தேவை என குழந்தைக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது… நாம் அனைவரும் நன்றாக சுவாசிக்க வேண்டும்!” என்று மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக உலகுக்கு வந்துள்ள குழந்தை புதிய செய்தியுடன் வந்துள்ளதா? கொரோனாவிலிருந்து விடிவுகாலம் விரைவிலேயே வருமா? பழைய வாழ்க்கை மீண்டும் திரும்புமா?
விடைகள் விரைவில் கிடைக்கும்…. அதுவரை இந்த அழகு குழந்தையின் அர்த்தமுள்ள செயலை ரசிப்போம்!!
ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR