173 பேர் இருந்த விமானம் விபத்துக்குள்ளானது! பிலிப்பைன்ஸ் விமான நிலைய விபத்து
கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் எதிர்பாராத விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் இருந்த 162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் விமானம் சேதமடைந்துள்ளது.
Plane Accident: கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் எதிர்பாராத விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் இருந்த 162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் விமானம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் அரசு, விசாரணை நடத்தி வருகிறது. ஏர்பஸ் ஏ330 விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது புல் கிராசிங் ஓடுபாதையில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
மழை காரணமாக பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. விபத்து நிகழ்ந்ததும், விமானத்தில் இருந்த 162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் உடனடியாக அவசர வாயிலைப் பயன்படுத்தினார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மக்டன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
விபத்து நடந்த உடனே, இந்த விமானநிலையத்தில் இருந்து புறப்பட இருந்த டஜன் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கொரிய ஏர் நிறுவனத்தின் உரிமையாளர் வூ கி-ஹாங், உள்ளூர் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | England PM: இங்கிலாந்து பிரதமராக மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்?
பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்து, விமான நிறுவனம் கவனமாக இருப்பதாகவும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கொரிய ஏர் நிறுவனத்தின் உரிமையாளர் வூ கி-ஹாங் கூறினார். விமானத்தில் இருந்த பயணிகள் உள்ளூர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கொரிய ஏர்லைன்ஸ் co.com வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களை ஏற்றிச் சென்ற A330-300 விமானம் மோசமான வானிலையில் தரையிறங்க இரண்டு முயற்சிகளை மேற்கொண்டது, அவை மூன்றாவது முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.07 மணிக்கு ஓடுபாதையைத் தாண்டிச் சென்றது. தற்போது, விமானம் நிறுத்தப்பட்டதால், செபு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
செபுவிற்கு செல்லும் மற்ற விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. இந்த சம்பவத்தால் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு, MCIA க்கு மற்றும் புறப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ