China President Xi Jinping: மேலும் ஐந்தாண்டுகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜி ஜின்பிங். மாவோவுக்கு பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சியில், மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராகப் பதவியேற்றவர் ஜி ஜின்பிங் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,பெய்ஜிங்கின் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பில் வெற்றி உரையாற்றினார் ஜி ஜின்பிங். 'உலகிற்கு சீனா தேவை' என்றுறும், விடாமுயற்சியுடன் பணியாற்றுவதாகவும் அவர் சபதம் ஏற்றார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் மத்திய குழு மற்றொரு ஐந்தாண்டு காலத்திற்கு அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்ததை அடுத்து மூன்றாவது முறையாக பதவியேற்றார். “எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு முழுக் கட்சிக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி மற்றும் மக்களின் பெரும் நம்பிக்கைக்கு தகுதியானவன் நான் என்பதை நிரூபிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்," என்று ஜி கூறினார்.
"உலகம் இல்லாமல் சீனா வளர்ச்சியடையாது, அதேபோல, உலகிற்கு சீனாவும் தேவை" என்று அவர் மேலும் கூறினார், "சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்துக்கான 40 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிகளுக்குப் பிறகு, விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக ஸ்திரத்தன்மை" என இரண்டு அதிசயங்களை உருவாக்கியுள்ளோம்” என்று ஜி ஜிங்பிங் தெரிவித்தார்.
"சீன தேசத்தை புத்துணர்ச்சி" அடையச் செய்வதாக உறுதியளித்த ஜி, தைவானை இணைக்க வேண்டும் என்பதை முக்கிய விருப்பமாக முன்வைத்தார். காங்கிரஸின் தொடக்க விழாவில் பிறகு பேசிய ஜி, தைவான் பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்பினார். அத்துடன் சீனாவின் வணிகத்தில் தலையிட வேண்டாம் என்று மேற்கத்திய மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | சீனாவில் ஜி ஜிங்க்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! 14 லட்சம் பேர் கைது!
தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அரசாங்கத்தின் வருடாந்திர சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஜி மூன்றாவது முறையாக அதிபராக நியமிக்கப்படுவார்.
சிபிசி காங்கிரஸ் தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜி ஜின்பிங் நியமனம் நடைபெற்றது. அதன்பிறகு, சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட உரையை நிகழ்த்தினார் ஜி ஜின்பிங். தனக்கு மூன்றாவது முறை பதவியை வழங்கியதன் மூலம், மக்கள் குடியரசை நிறுவிய மாவோ சேதுங்கின் மரபுக்கு இணையாக ஷி தன்னைக் கொண்டு வந்துள்ளார்.
மேலும் படிக்க | விளையாட்டிலும் மனிதனை விஞ்சும் ரோபோ! கூடைப்பந்து விளையாட்டில் Robot கின்னஸ் சாதனை
கட்சி சாசனத்தில் திருத்தங்கள் மீது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சி உறுப்பினர்களும் "கட்சியின் மத்திய குழுவிலும், கட்சியிலும் தோழர் ஜி ஜின்பிங்கின் முக்கிய நிலையை நிலைநிறுத்த வேண்டும்" என்ற அழைப்பை ஆதரித்தனர்.
நிறைவு விழாவில், கட்சியின் மத்திய குழுவிற்காக, சுமார் 200 உயர்மட்ட கட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக தனது விசுவாசிகளைத் தேர்ந்தெடுத்தார் ஜி ஜின்பிங். பிரீமியர் லி, லி ஜான்ஷு, சென் குவாங்குவோ, வாங் யாங் மற்றும் ஹான் ஜெங் போன்றவர்கள் கட்சியின் மத்திய குழுவில் தற்போது இல்லை. அவர்கள் மத்தியக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கட்சியில், ஒருவர் இரு முறை மட்டுமே அதாவது, 5-5 ஆண்டுகள் என மொத்தம் பத்து ஆண்டுகள் மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்று அதிகபட்ச வரம்பு நடைமுறையில் இருந்தது.
ஆனால் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக வகை செய்யும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த கூட்டத்தில் அந்த நிபந்தனையை நீக்கியது. இதன் காரணமாக ஜி ஜின்பிங் இந்த பதவியில் வாழ்நாள் முழுவதும் நீடிக்க இப்போது வழி கிடைத்துள்ளது. இதற்கு நாட்டில் எதிர்ப்புகளும் அதிக அளவில் இருந்ததால், இந்த ஆண்டு ஜூன் மாதம் போராட்டங்கள் வெடித்தன, அதில் 14 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ