England PM: இங்கிலாந்து பிரதமராக மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்?

UK politics: அடுத்த பிரதமர் யார்? தள்ளாடும் இங்கிலாந்து பிரதமர் நாற்காலி! மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்? அல்லது போரிஸ் ஜான்சன் பக்கம் அடிக்குமா காற்று?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2022, 08:58 PM IST
  • தள்ளாடும் இங்கிலாந்து பிரதமர் நாற்காலி!
  • மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்?
  • போரிஸ் ஜான்சன் பக்கம் அடிக்குமா காற்று?
England PM: இங்கிலாந்து பிரதமராக மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்?  title=

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்தின் பிரதமராகத் தயார் என்று ரிஷி சுனக் அறிவித்துள்ளார். தன்னை முறைப்படி பிரதமர் வேட்பாளராக அறிவித்த அவர்ர், 'பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும்' என்று தனது விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார். வேட்பாளராக களம் இறங்குவதை அறிவித்த ரிஷி சுனக், இங்கிலாந்து சிறந்த நாடு "ஆனால் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்" என்றும், அதனால்தான் "கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அடுத்த பிரதமராகவும் வேட்பாளராக நிற்கிறேன்" என்று சுனக் கூறினார்.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) பதவி விலகும் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸுக்குப் பிறகு பதவியேற்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேசம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால், இங்கிலாந்தை வழிநடத்த சில மாதங்களில் இது அவரது இரண்டாவது முயற்சியாகும்.

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு 

அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் ஆவதற்கான தனது இரண்டாவது முயற்சியை அறிவித்த ரிஷி சுனக்கை, லிஸ் ட்ரஸ் ஆறு வாரங்களுக்கு முன்னர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் வழிநடத்தும் அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை இருக்கும், மேலும் நான் நாள் முழுவதும் வேலை செய்வேன்" என்று சுனக் தெரிவித்துள்ளார்.

மூன்று தினங்களுக்கு முன்னதாக, திடீரென லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்த பின்னர், ரிஷி சுனக்கிற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ட்ரஸுக்கு எதிராகப் போட்டியிட்ட அவர், தற்போது அவரது பதவி விலகலுக்குப் பின்னர் மீண்டும் பிரதமர் பதவி வேட்பாளராக களம் இறங்குகிறார். அவருக்கு பலரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

ரிஷி சுனக்கிற்கு முன்னதாக, பென்னி மோர்டான்ட் வெள்ளிக்கிழமை பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், போரிஸ்,ஜான்சனும் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆட்சியை விட்டு வெளியேறிய இரண்டு மாதங்களுக்குள் அரசியல் ரீதியாக மீண்டும் வர திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

திங்கட்கிழமை காலக்கெடுவுக்கு முன்னதாக, கன்சர்வேடிவ் எம்.பி.க்கள் மத்தியில் வாக்களிக்கத் தேவையான 100 பரிந்துரைகளை சேகரிக்க போரிஸ் கடுமையாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

விதிகளின்படி, ஒரு வேட்பாளர் மட்டுமே தேவையான 100 சட்டமன்ற வாக்குகளைப் பெற்றால், பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், கன்சர்வேடிவ் கட்சியின் சுமார் 170,000 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். 

மேலும் படிக்க | UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News