ஐரோப்பாவில் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு பிரான்ஸ், இதன் காரணமாக உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு நாடாக உள்ளது.. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அதன் தலைநகரான பாரிஸில் இருக்கும் போது, ​​மூலோபாய கூட்டாண்மையுடன் தொடர்புடைய பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்துச் செல்வார். கடந்த 25 ஆண்டுகளாக உறுதியாக நிற்கும் இந்தியாவின் கூட்டாளி பிரான்ஸ். மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவை ஒருபோதும் எதிர்க்காத நாடு இது. இந்தியப் படைகளை வலுப்படுத்தும் விஷயமாக இருந்தாலும் சரி, அணு ஆயுதத் தாக்குதல் நடக்கும் நேரமாக இருந்தாலும் சரி, பிரான்ஸ் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று தான் வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் அணுகுண்டு சோதனை 


ஸ்ட்ராட்நியூஸ் உடனான உரையாடலில், பிரான்சுக்கான இந்திய தூதராக இருந்த மோகன் குமார், இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவு ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று விளக்கினார். 1998-ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி தடை விதிக்கப்பட்ட காலகட்டம் பிரான்ஸ் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது என்றும் இந்தியாவின் அணு குண்டு சோதனையை ஏற்றுக்கொள்ள அப்போது எந்த நாடும் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த பிரான்ஸ்


அணு குண்டு சோதனை நடத்திய காலகட்டத்தில், மேற்கத்திய நாடும் இந்தியாவுடன் உறவைத் தொடங்க விரும்பவில்லை. எந்த இந்திய தூதரிடமும் பேச கூட தயாராக இல்லை. அப்படிப்பட்ட நேரத்தில், அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தார். ஆசியாவின் வளர்ந்து வரும் வல்லரசுகளை நாம் புறக்கணிக்கக் கூடாது என்று ஜாக் சிராக் அப்போது கூறினார். அவர்களால் தான் இன்று இந்த மூலோபாய கூட்டாண்மை வலுவாகியுள்ளது.


இரு நாடுகளின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை


இந்தியா 30 நாடுகளுடன் மூலோபாய உறவுகளைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு சில நாடுகளுடன் மட்டுமே முற்றிலும் மூலோபாய கூட்டாண்மை அடிப்படையிலான உறவுகள் உள்ளன என்று அவர் கூறினார். இந்தியா மற்றும் பிரான்சின் வெளியுறவுக் கொள்கை ஏறக்குறைய ஒன்று தான். இரு நாடுகளும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இரு நாடுகளும் சுதந்திரமான மூலோபாய சுயாட்சியை நம்புகின்றன.


மேலும் படிக்க | போதை பொருளுக்கு அனுமதி... ஸ்காட்லாந்து அரசு நடவடிக்கை... தடை போட்ட UK!


இந்தியாவுக்கான பிரான்சின்  நிலைப்பாடு


இந்தியாவுக்கான பிரான்சின் அணுகுமுறை மாறவே இல்லை. அதே சமயம் இந்தியாவின் கவலைகளையும் பிரான்ஸ் புரிந்துகொண்டுள்ளது. கவலைகளைப் புரிந்துகொண்டு இந்தியாவுக்காக முன்வரும் வல்லரசு உலகில் இல்லை. இந்த மூலோபாய கூட்டாண்மை பல சந்தர்ப்பங்களில் சோதிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் சோதனையில் தேர்ச்சி பெற்றது. கடந்த காலங்களில் பிரான்ஸ் பாகிஸ்தானுக்கு உதவியிருந்தாலும், இந்தியாவை அது மோசமாக பாதிக்கவில்லை என்று மோகன் குமார் கூறினார். 


பாதுகாப்பு கவுன்சிலில் உண்மையான கூட்டாளி


 ஐரோப்பிய யூனியனிலிருந்து (EU) பிரிட்டன் வெளியேறிய பிறகு, பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஐரோப்பாவின் ஒரே நாடு பிரான்ஸ் மற்றும் அணுசக்தி வசதி கொண்டது. அத்தகைய சூழ்நிலையில், அணுசக்தி துறையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாத்தியம் கணிசமாக அதிகரிக்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருப்பதால், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், பயங்கரவாதிகளைத் தடை செய்வதற்கும், ஏவுகணைக் கட்டுப்பாட்டு ஆட்சியில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் பல விஷயங்களில் இந்தியாவின் மிகப்பெரிய உதவியாளராக பிரான்ஸ் உள்ளது.


மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ