ஐரோப்பாவில் போதை பொருளால் மிக அதிகமான அளவுக்கதிகமான இறப்பு விகிதங்களை சமாளிக்க தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அனைத்து மருந்துகளையும் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க ஸ்காட்டிஷ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும், இந்த ஆலோசனையானது லண்டனில் உள்ள கன்சர்வேடிவ் U.K அரசாங்கத்தால் கிட்டத்தட்ட உடனடியாகத் தடுக்கப்பட்டது, அது போதைப்பொருள் சட்டங்களை மென்மையாக்குவதற்கு "எந்த திட்டமும் இல்லை" என்று கூறியது.
சுதந்திரத்திற்கு ஆதரவான ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைமையிலான எடின்பர்க் அரசாங்கம், போதைப் பொருள் வைத்திருந்ததற்கான குற்றவியல் தண்டனைகளை நீக்குவது குறித்து அறிவித்தது. 'பாதுகாப்பான வகையில் மற்றும் ஆதாரம் சார்ந்த வகையில் போதைப் பொருள் வழங்க அனுமதிக்கும்' என்று வெள்ளிக்கிழமை கூறியது. ஐரோப்பாவில் போதைப்பொருள் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகம் உள்ள இடங்களில் ஸ்காட்லாந்தும் ஒன்றாகும். ஸ்காட்லாந்தில் போதைப்பொருள் அளவுக்கதிகமான இறப்பு விகிதம் இங்கிலாந்தை விட மூன்று மடங்கு அதிகம்.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 5.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஸ்காட்லாந்தில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1,100 போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் நடந்துள்ளன. "போதைக்கு எதிரான போர் தோல்வியடைந்தது," ஸ்காட்டிஷ் அமைச்சர் எலினா விட்டம் நியூசிலாந்தின் முன்னாள் பிரதம மந்திரி ஹெலன் கிளார்க் மற்றும் முன்னாள் சுவிஸ் ஜனாதிபதி ரூத் டிரீஃபஸ் ஆகியோருடன் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். "எங்கள் தற்போதைய போதைப் பொருள் சட்டம் மக்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை, இது தொடர்புடைய தீங்குகளை அனுபவிப்பதைத் தடுக்கவில்லை, விமர்சன ரீதியாக, இது மக்கள் இறப்பதைத் தடுக்கவில்லை. என்வே மாற்றம் அவசியம்," என்று எலினா விட்டம் கூறினார்.
ஸ்காட்டிஷ் அரசாங்கம், போதை மருந்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் "போதை பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் பிற உதவிகளை பயமின்றி அணுக வழிவகுக்கும் என்றும், இதனால், போதைப் பொருள் தொடர்பான தீங்குகள் குறைந்து, இறுதியில், வாழ்க்கையை மேம்படுத்தும்" என்று கூறியது. போர்ச்சுகலின் உதாரணத்தை மேற்கோள் காட்டியத ஸ்காலாந்து அரசு, இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் போதைப்பொருள் வைத்திருந்ததற்கு குற்றவியல் தண்டனைகளை கொடுக்காமல், சிகிச்சையில் கவனம் செலுத்தியதால், நிலைமை மேம்பட்டதாக கூறியுள்ளது.
ஸ்காலாந்து அரசாங்கம் போதை பொருள் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அதனால் அது மேற்பார்வையிடப்பட்ட போதைப் பொருள் நுகர்வு அறைகளை உருவாக்கி, போதை பொருள் எடுத்துக் கொள்பவரை கண்காணிக்க முடியும் மற்றும் மருந்துகளின் ஒழுங்குமுறை விநியோகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக எலினா விட்டம் கூறினார். போதை பொருள் பிரச்சனையை கையாள, சட்டத்தில் தீவிரமான மாற்றம் செய்யாமல் இருந்தால், நெருக்கடி மோசமடையும் என்றார். ஸ்காட்லாந்து "செயற்கை ஓபியாய்டுகள் மற்றும் புதிய மற்றும் புதுமையான பென்சோடியாசெபைன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடுமையான போதை பொருள் பிரச்சனையை எதிர்கொள்கிறது" என்று அவர் கூறினார்.
ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். இது கிரேட் பிரிட்டனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 78850 சதுர கி.மீ. ஸ்காட்லாந்தின் தலைநகரம் எடின்பர்க் ஆகும். , கிளாஸ்கோ இங்கு மிகப்பெரிய நகரம். ஸ்காட்லாந்தின் நாணயம் பிரிட்டிஷ் பவுண்டிலிருந்து சிறிது வேறுபடுகிறது, ஆனால் அதே மதிப்பைக் கொண்டுள்ளது.