அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் இஸ்லாமிய நாடான அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயிலை திறந்து வைத்தார். போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) கட்டியுள்ள கோவிலை திறந்து வைத்த அவர், உலகம் முழுவதும் உள்ள 1,200 BAPS கோவில்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் 'உலகளாவிய ஆரத்தி' வைபவத்திலும் பங்கேற்கிறார். அபுதாபியில் கட்டபட்டுள்ள பிரம்மாண்ட ஹிந்து கோயில், அபுதாபியை துபாயுடன் இணைக்கும் ஷேக் சையத் நெடுஞ்சாலையில், சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு நாடுகளை குறிக்கும் வகையில், கோவில் ஏழு கோபுரங்களைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைத்துள்ளார். 2015க்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு ஏழாவது முறையாக பிரதமர் மோடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோவிலில், உள்ள சிற்ப வேறுபாடுகள், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களால் ஆன கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் என கோவில் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பளிங்கு கற்களால் ஆன இந்த கோவிலில், ஸ்ரீராமர், விநாயகப் பெருமான், ஐயப்பன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.
அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக அபுதாபியில் இந்துகோவில் கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று அமீரக அரசு கோவில் கட்ட அனுமதி அளித்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அரசு முறை பயணமாக அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் ஜையது அல் நஹ்யான், அபுதாபி விமான நிலையத்தில், பிரதமரை கட்டித் தழுவி, வரவேற்றார். இந்த பயணத்தின் போது இருதரப்பு முதலீடுகள் உட்பட பல்வேறு துறைகளில், எட்டு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், நேற்று மாலை, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமீரகம் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், எனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன் என்றூம், நீங்கள் பிறந்த மண்ணின் வாசத்தை நான் இங்கு கொண்டுவந்துள்ளேன் என்றும் கூறினார். 140 கோடி மக்களின் செய்தியை கொண்டு வந்துள்ளேன் எனக் கூறிய அவர், அந்த செய்தி என்னவென்றால் இந்தியா உங்களை நினைத்து பெருமைபடுகிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். இதனை தொடர்ந்து இன்று அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ