மியான்மரில்  (Mynamar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக  போராட்டங்கள் தொடர்கின்றன. சனிக்கிழமை இரவு, ஆர்ப்பாட்டக்காரர்கள்  மிகவும் அமைதியான முறையில், நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 1 ம் தேதி  ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi ) தலைமையிலான ஜனநாயகக் கட்சியை இராணுவம் பதிவியிலிருந்து அகற்றி, அவரையும் அவரது பல என்எல்டி கட்சி உறுப்பினர்களுடன் கைது செய்தது.  ராணுவம் அதிரடியாக ஆட்சியை பிடித்ததை அடுத்து, தொடர்ந்து நடைபெறும் ஜனநாயக ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறைக்கு உலக நாடுகள் பல, குறிப்பாக மேலை நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன


ALSO READ | மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; 22 பேர் படுகொலை; அமலானது ராணுவ சட்டம்..!!!


ஜனநாயகத்தை மீட்க நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில், முக்கிய நகரமான யாங்கோனில் இருந்து கச்சின் மாநிலம் வரை ஒரே இரவில் 20 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


பல இடங்களில், போராட்டக்காரர்களுடன் பவுத்த பிட்சுகள் மெழுகுவர்த்திகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். 


மியான்மரில் (Myanmar) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.


ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம்  நிராகரித்தது.


ALSO READ | மியான்மார் ராணுவத்தின் ஒடுக்குதலையும் மீறி தீவிரமடைகிறது மக்கள் போராட்டம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR