மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; 22 பேர் படுகொலை; அமலானது ராணுவ சட்டம்..!!!

மியான்மரில், மக்கள் தொகை அதிகம் உள்ள யாங்கூனின் இரண்டு நகரப்பகுதிகளில் அதிகாரிகள் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தினர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2021, 05:01 PM IST
  • யாங்கூனின் தொழில்துறை பகுதியில் பாதுகாப்பு படையினரால் ஞாயிற்றுக்கிழமை 22 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
  • பல சீன ஊழியர்கள் காயமடைந்து தீ விபத்தில் சிக்கியுள்ளதாக சீன தூதரகத்திற்கு தகவல் கிடைத்தது.
  • மியான்மர் இராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க, மிகவும் அத்துமீறி செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; 22 பேர் படுகொலை; அமலானது ராணுவ சட்டம்..!!! title=

இணையதளத்தடை, துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, என எதுவும் பலனளிக்காமல், அனைத்து ஒடுக்குதலையும் மீறி மியான்மாரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம், மிகவும் வலுவடைந்து வருகிறது. 

மியான்மரில், மக்கள் தொகை அதிகம் உள்ள யாங்கூனின் இரண்டு நகரப்பகுதிகளில் அதிகாரிகள் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தினர். யாங்கூனின் தொழில்துறை பகுதியான ஹிலிங் தாயா புறநகரில் பாதுகாப்பு படையினரால் ஞாயிற்றுக்கிழமை 22 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

யாங்கோன் புறநகர்ப் பகுதியில் உள்ள சீன நிதியுதவி தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன - ஹ்லேங் தயா. ஆடைத் தொழிற்சாலைகளில் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் பல சீன ஊழியர்கள் காயமடைந்து தீ விபத்தில் சிக்கியுள்ளதாக சீன தூதரகத்திற்கு தகவல் கிடைத்தது.

வன்முறைக்கு இடையில், மியான்மரின் (Myanmar) மிகப்பெரிய நகரமான யாங்கூனில் இரண்டு நகரங்களில் இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ராணுவ சட்டத்தின் கீழ், இராணுவ ஆட்சியில் அமைதியை பராமரிக்க யங்கோன் பிராந்திய தளபதிக்கு நிர்வாக மற்றும் நீதித்துறை, இராணுவம் ஆகியவற்றின் சட்ட அதிகாரத்தை ஆட்சிக்குழு வழங்கியுள்ளது.

மியான்மருக்கான ஐக்கிய நாடுகளின் (UN) தூதர் "தொடர்ச்சியான அடக்குறைகளை" கண்டித்தார்.

கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் ஒரு அறிக்கையில் கூறியதாவது: "பிராந்திய நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் மியான்மர் மக்களுக்கும் அவர்களின் ஜனநாயக ஆதரவுக்கும் ஆதரவளித்து, ஒன்றிணைய வேண்டும்."

மியான்மர் இராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க, மிகவும் அத்துமீறி செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவம் அடக்கு முறையை கையாள்கிறது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் ஒடுக்க கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள்  ஆகியவற்றோடு துப்பாக்கி சூடும் நடத்துவதில் பலர் கொல்லப்பட்டத்தை நிலைமை மிகவும் கொந்தளிப்பாக உள்ளது.

ALSO READ | மியான்மாரில் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் ராணுவம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News