மியான்மார் ராணுவத்தின் ஒடுக்குதலையும் மீறி தீவிரமடைகிறது மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றையும் முடக்கியது.  இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2021, 03:03 PM IST
  • மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
  • நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
மியான்மார் ராணுவத்தின் ஒடுக்குதலையும் மீறி தீவிரமடைகிறது மக்கள் போராட்டம் title=

இணையதளத்தடை, துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, என எதுவும் பலனளிக்காமல், அனைத்து ஒடுக்குதலையும் மீறி மியான்மாரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம், மிகவும் வலுவடைந்து வருகிறது. 

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றையும் முடக்கியது.  இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.

ராணுவம் தனது சாம் பேத, தான, தண்ட முறைகளை பயன்படுத்தி அதனை ஒடுக்க நினைக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதர்கள், பொது மக்கள் மீது பாதுகாப்பு படைகள் தாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர். 

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம்  நிராகரித்தது.
எனினும் மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

வெளிநாட்டவைரையும் விட்டு வைக்காத ராணுவம் ஆங் சான் சூகியின் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார ஆலோசகரையும் ராணுவம் கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது.

மியான்மாரில் ஆங் சான் சூ கி-யை (Aung San Suu Kyi) விடுவிக்கக் கோரியும், தற்போதுள்ள அரசியல் பதட்ட நிலையை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கினர். கலவரம் ஏற்படமால்  சேவை முடக்கப்பட்டது. வீதியில் இறங்கிய மக்கள் “இராணுவ சர்வாதிகாரி ஒழிக, ஜனநாயகம் வாழ்க” என கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்களுக்கு வீதிகளில் மக்கள் உணவும் தண்ணீரும் அளித்து உதவினர்.

ALSO READ | தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் என மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News