விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல வகையான கூற்றுக்கள் தினம் தினம் வெளிவருகின்றன. தற்போது, அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை சீர் குலைந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. சில அறிக்கைகளில், அவர் ஒரு புற்றுநோயாளி என்று கூறப்படுகிறது. தி சன் நாளிதழின்ல் வெளியான ஒரு புதிய அறிக்கையில், புடின் சமீபத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக, அவர் தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புற்றுநோய் அறுவை சிகிச்சை


விளாடிமிர் புடின் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோயுடன் போராடுவதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. அவரது முகம் வீங்கியிருப்பது போன்ற சில படங்களும் வைரலாகி வருகின்றன. தற்போது புடினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.


புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக, அவரது காதலி அலினா கபேவாவின் 39வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் சிறப்பாக ஒரு பரிசு அனுப்பியிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்


புடினின் காதலி கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்


ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அலினா கபேவா என்பவருடன் தான் உறவில் இருப்பதாக புடின் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் இருவருக்கும் இடையிலான ஆழமான உறவு ஊடகங்களில் கூறப்பட்டது. சில செய்திகளில், புதினின் காதலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை மகள்கள் பிறந்து தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தி சன் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், ஜெனரல் எஸ்விஆர் என்ற டெலிகிராம் கணக்கில் மே 12 அலினா கபேவாவின் பிறந்தநாள் என்றும், இந்த சந்தர்ப்பத்தில், ரஷ்ய அதிபர் அவருக்கு சிறப்பு பரிசு அனுப்பியிருந்தார், ஆனால் அவர் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே நாளில் புடினுக்கு புற்றுநோய் ஆபரேஷன் நடந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Alina Kabaeva: இவர் தான் ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியா; அதிர வைக்கும் தகவல்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR