Defamation vs Rahul Gandhi: இந்தியாவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவருமான லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார், மேலும் அவர் 'மோடி குடும்பப்பெயர்' கருத்துக்காக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ராகுல் காந்தியை அச்சுறுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லலித் மோடி  இதுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்றாலும், "நாட்டை விட்டுதப்பியோடிவர்" என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துவருகிறது. வியாழக்கிழமையன்று தொடர்ச்சியான ட்வீட்களை பதிவிட்ட லலித் மோடி, தன்னை "உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வின்" பின்னணியில் உள்ளவர் என்று குறிப்பிட்டதோடு, ஐபில் $100 பில்லியன் ஈட்டியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.


தனது தாத்தா பாட்டியின் படங்களை வெளியிட்ட லலித் மோடி, ராகுல் காந்தி குடும்பத்தை விட தனது குடும்பம் இந்தியாவுக்கு அதிக பங்களிப்பை அளித்துள்ளது என்று கூறினார்.



லலித் அந்த ட்வீட்டில், “நான் தப்பியோடியவன் என்று திரும்பத் திரும்பச் சொல்வதைப் பார்க்கிறேன். ஏன்? எப்படி? என் மீது எப்போது குற்றம் சாட்டப்பட்டது?" என்று கேள்வி எழுப்புகிறார்.


“நான் பப்பு அல்லது ராகுல் காந்தியைப் போல அல்ல, ஒரு சாதாரண குடிமகன், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது. அவர்களிடம் தவறான தகவல் உள்ளது அல்லது பழிவாங்கும் உணர்வுடன் பேசுகிறார்கள் என்று லலித் மோடி கூறினார்.


மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே விழுந்த அடி..! 2 நட்சத்திர வீரர்கள் சந்தேகம்


மேலும், ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளேன். உறுதியான ஆதாரங்களுடன் அவர் வருவார் என்று நான் நம்புகிறேன். அவர் தன்னை முழுவதுமாக முட்டாளாக்கிக் கொள்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று லலித் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'மோடி குடும்பப்பெயர்' குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு லலித் மோடி, லண்டனில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.


மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாகக் காண்பிக்கும் ரிலையன்ஸ் அம்பானி


பல காங்கிரஸ் தலைவர்கள் காந்தி குடும்பத்திற்காக "நிதி திரட்டியதாகவும்" "வெளிநாட்டில் சொத்துக்கள்" இருப்பதாகவும் குற்றம் சாட்டிய லலித் மோடி ஒரு ட்வீட்டில், . இது தொடர்பாக மேலும் விவரங்களை அளிக்க முடியும் என்றும் கூறினார்.


“கடந்த 15 வருடங்களில் நான் ஒரு பைசா கூட வாங்கியதாக நிரூபிக்கப்படவில்லை. சுமார் 100 பில்லியன் டாலர்கள் சம்பாதித்த உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை நான் தயார் செய்தேன் என்பது நிச்சயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


1950 களின் முற்பகுதியில் இருந்தே, (லலித்) மோடி குடும்பம் தனக்காகவும், தனது நாட்டிற்காகவும் அவர் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்துள்ளார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர் மறந்துவிடக் கூடாது," என்று லலித் கூறினார்.


2010 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் வசித்து வரும் லலித், நாட்டில் கடுமையான அவதூறு சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் தான் இந்தியா திரும்புவேன் என்று கூறினார்.


மேலும் படிக்க | நாட்டாமை... தீர்ப்பை மாத்தி சொல்லு! ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ