ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாகக் காண்பிக்கும் ரிலையன்ஸ் அம்பானி

IPL 2023 live In Jio Cinema: ஐபிஎல் 2023 போட்டிகள் ரிலையன்ஸ் ஜியோவில் இலவசம். ரூ. 23,758 கோடி செலவில் ஐபிஎல் 2023 போட்டிகளை ஒளிபரப்பும் ஜியோ, ரசிகர்களுக்கு சந்தா இல்லாமல் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 30, 2023, 06:59 PM IST
  • ஐபிஎல் 2023 போட்டிகள் ரிலையன்ஸ் ஜியோவில் இலவசம்
  • ஐபிஎல் 2023 இன் நேரடி ஒளிபரப்பிற்காக ரிலையன்ஸ் செய்த செலவு
  • ரூ. 23,758 கோடி செலவில் ஐபிஎல் 2023 போட்டிகளை ஒளிபரப்பும் ஜியோ சினிமா
ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாகக் காண்பிக்கும் ரிலையன்ஸ் அம்பானி title=

IPL 2023 matches On Reliance JIO: ரிலையன்ஸ் குழுமம் ஜியோ சினிமாவில் ஐபிஎல் 2023 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பிற்காக ரூ. 23,758 கோடி செலவிட்டுள்ளது, ஆனால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு போட்டியை இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிறுவனம் ஐபிஎல் ஐ இலவசமாக ஒளிபரப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2023

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு திருவிழாவைப் போலவே இருக்கிறது. கிரிக்கெட் பிரியர்களின் விருப்பமான ஐபிஎல் (Indian Premier League) மார்ச் 31 முதல் தொடங்க உள்ளது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு நிறுவனம் ஐபிஎல்லை இலவசமாக ஒளிபரப்ப உள்ளது.

ஐபில் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்

இந்த முறை ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க யாரும் சந்தா செலுத்த வேண்டிய தேவையில்லை என்று அம்பானி குழுமத்தின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முறை ஐபிஎல் காண்பிக்கும் பொறுப்பு அம்பானி குழுமத்தின் ஜியோ சினிமாவிடம் உள்ளது.

மேலும் படிக்க | GT vs CSK: முதல் போட்டியில் வெற்றி பெற சென்னை அணி செய்ய வேண்டியவை!

ஐபிஎல்லை இலவசமாகக் காண்பித்த பிறகு அம்பானி குழுமம் நஷ்டத்தை சந்திக்கும், அய்யோ பாவம் என்று பலர் நினைக்கக்கூடும், ஆனால் அது உண்மையில்லை. இதற்கு முன், ஜியோ சினிமாவில் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்காக ரிலையன்ஸ் குழுமம் 23,758 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஜியோவுக்கு முன், ஸ்ட்ரீமிங் உரிமைகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிடம் இருந்தது.

நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா?

அம்பானியின் நிறுவனம் JioCinema மூலம் IPL ஐ இலவசமாகக் காண்பிக்கும் மற்றும் அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறாமல், விளம்பரதாரர்களிடமிருந்து பணம் வசூலிக்க முயற்சிக்கும். இது தவிர, இணைய நுகர்வை அதிகரிப்பதில் நிறுவனத்தின் கவனம் இருக்கும். வீடியோ தரத்தை மேம்படுத்துவதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உதாரணமாக, நீங்கள் 360 Mbps வேகத்தில் போட்டியைப் பார்த்தால், 2GB டேட்டா பயன்படுத்தப்படும். வீடியோ தரம் உயர்வாக இருந்தால், அதிக இணையம் தேவைப்படும். இதன் பொருள் இணைய நுகர்வு உயர் தரத்துடன் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் அதிக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே விழுந்த அடி..! 2 நட்சத்திர வீரர்கள் சந்தேகம்

இலவசமாக ஐபிஎல் பார்ப்பது எவ்வாறு?

நீங்கள் ஐபிஎல் பார்க்க பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.காம் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதற்குப் பிறகு, நேரடி ஐபிஎல் விருப்பத்தை முகப்புப் பக்கத்திலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, நேரடி ஐபிஎல் போட்டி திரையில் தோன்றும்.

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும். ஐபிஎல் 2023 இன் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறும் போட்டியைக் காண மக்கள் ஆவலாக உள்ளனர்..

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News