மியாமி சர்வதேச விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கிய பின் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், ரெட் ஏர் விமானம் 203 ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) விமானம் டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேரிட்டுள்ளது. விமானத்தில் 11 பணியாளர்கள் உட்பட 126 பேர் இருந்தனர். தீ பிடித்த விமானம் ஓடுபாதையின் ஓரத்தில் உள்ள புல்வெளி பகுதிக்கு அருகே விமானம் வந்து நின்றது. இந்த தீ விபத்து காரணமாக சில விமானங்கள் தாமதமாக வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 


மியாமி-டேட் ஃபயர் ரெஸ்க்யூ தனது ட்விட்டரில், "தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், எரிபொருள் கசிவையும் சீர் செய்து வருகின்றனர்" என்று பதிவிட்டுள்ளது. தீயை அணைக்க நுரை லாரிகள் பயன்படுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்


வீடியோவை இங்கே காணலாம்:



விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்ற பயணிகளால் எடுக்கப்பட்ட சமூக ஊடக வீடியோக்களில், தீயணைப்பு வீரர்கள் விமானத்தை நோக்கி வெள்ளை இரசாயன நுரையை வீசி தீயை கட்டுக்குள் கொண்டு வருவதைக் காணலாம். சில வீடியோக்களில் பயந்துபோன பயணிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதைக் காணலாம்.


உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பித்ததை பற்றி கூறிய மியாமி-டேட் கவுண்டி மேயர் டேனியலா லெவின் காவா "இங்கே நடந்தது ஒரு அதிசயம்" என்று கூறியதாக 7நியூஸ் மியாமி மேற்கோளிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் புதன்கிழமை சம்பவ இடத்திற்கு புலனாய்வாளர்கள் குழுவை அனுப்பி விசாரணையை மேற்கொள்ளும் என்றும் செய்தி நிறுவனம் என்று கூறியது.


டொமினிகன் இன்ஸ்டிடியூட் ஆப் சிவில் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொள்ளும் என்று ரெட் ஏர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டொமினிகன் குடியரசு மற்றும் வெனிசுலாவை தளமாகக் கொண்ட ரெட் ஏர், 2021 இன் பிற்பகுதியில் இருந்து விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR