பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நியூயார்க்கில், நேற்று( வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12) கத்தியால் குத்திய ஆசாமியின் அடையாளத்தை நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ளனர். 'சாத்தானின் வசனங்கள்' என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை நியூயார்க் போலீசார் மேற்கொண்டுள்ளனர். நியூஜெர்சியின் ஃபேர்வியூவில் வசிக்கும் 24 வயதுடைய ஹாடி மாதர் என்ற இளைஞன், சல்மான் ருஷ்டியை தாக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்


திடீரென்று மேடையில் ஏறிய நபர், ருஷ்டியை கழுத்துப் பகுதியில் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தாக்குதலுக்கு ஆளான சல்மான் ருஷ்டியை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், காப்பாற்ற முற்படும் காட்சிகள் கொண்ட வீடியோ, இணையத்தில் வைரலாகிறது.



 'தி நியூயார்க் போஸ்ட்'  நியூயார்க் சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சல்மான் ருஷ்டியின் மரணத்திற்கு அழைப்பு விடுத்த இரானின் செய்திக்கு சந்தேக நபர் ஆதரவு தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.


சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு உலக அளவில் மரண அச்சுறுத்தல்கள் இருந்தன. தற்போது ழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.


புக்கர் பரிசு வென்ற சல்மான் ருஷ்டி, ஷட்டாக்குவா என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கொலைவெறி சம்பவம் நடைபெற்றது.


மேலும் படிக்க | கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்


அங்கு இருந்த மருத்துவர் ஒருவர், கத்தியால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டிக்கு முதலுதவி செய்ததாக ரீடா லிண்ட்மேன் என்ற மருத்துவர் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார். ருஷ்டியின் கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்தப்பட்டதும், ருஷ்டியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு தெறித்தது.


சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேடையில் இருந்த மற்றொரு நபரும் தாக்கப்பட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.


75 வயதான சல்மான் ருஷ்டி, கலைச் சுதந்திரம் பற்றி பேசுவதற்காக  மேடையில் இருந்தபோது, இந்த தாக்குதல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்து வந்த நியூயார்க் மாநில போலீசார், தாக்குதல்தாரியை உடனடியாக கைது செய்தனர்.


தற்போது அறுவைசிகிச்சை முடிவடைந்த சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.  இந்த தாக்குதல்  பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ