தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்

Sri Lanka president on the run: நாடு நாடாக தப்பியோடும் இலங்கை அதிபர்! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற ராஜபக்சே 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2022, 06:43 AM IST
  • சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார் கோட்டபய ராஜபக்ச
  • ராஜபக்ச 60 நாட்கள் மட்டுமே தாய்லாந்தில் இருப்பார் என தாய்லாந்து அறிவிப்பு
  • நாடு விட்டு நாடு செல்லும் இலங்கையின் முன்னாள் அதிபரின் அவலம்
தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் title=

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் அடைக்கல்ம் புகுந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச, வியாழன் அன்று (2022 ஆகஸ்ட் 11) வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் தனது தீவு தேசத்தை விட்டு வெளியேறிய பின்னர் முதலில் சிங்கப்பூரில் இருந்த அவர், இரண்டாவதாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்காலிகமாக தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறியதாக நகர-மாநில குடிவரவு அலுவலகம் கூறியது, சிங்கப்பூரில் தங்குவதற்கான ராஜபக்‌சவின் சமூக வருகை அனுமதி காலாவதியானது.

பரவலான எதிர்ப்புகளுக்குப் பிறகு கடந்த மாதம் தனது தாயகமான இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்ச, தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளார். சுதந்திரம் அடைந்த ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அவரது நிர்வாகம் கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் அவரை நாடு நாடாக ஓடச் செய்கிறது.

மேலும் படிக்க | கோத்தபய ராஜபக்ச தலைமேல் தொங்கும் கத்தி; மனித் உரிமை அமைப்பு அளித்த புகார் 

இலங்கையின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, ராஜபக்‌சவுக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மாளிகை மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்ட சில நாட்களுக்குப் பிறகு, ராஜபக்ஷ ஜூலை 14 அன்று சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.

தாயகத்தில் இருந்து வெளியேறியதுடன் தனது பதவியை ராஜினாமா செய்த ராஜபக்‌ச, சிங்கப்பூர் தங்கலுக்கான காலம் முடிந்து தற்போது தாய்லாந்துக்கு 90 நாள் விசாவில் சென்றிருக்கிறார்.

ஆனால் அதன்பிறகு, வேறொரு நாட்டில் தற்காலிக தஞ்சம் அடைவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், நவம்பர் மாதம் ராஜபக்ச, இலங்கை திரும்புவார் என கூறப்படுகிறது.

மனிதாபிமான அடிப்படையில் ராஜபக்ச தாய்லாந்திற்குள் அனுமதிக்கப்படுவார் என்றும், இது ஒரு குறுகிய பயணமாக மட்டுமே இருக்கும் என்றும்  தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று (2022 ஆகஸ்ட் 11) நேற்று உறுதியளித்தார்.

தாய்லாந்தில் தாற்காலிகமாக வசிக்கும் ராஜபக்சவுக்கு அதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்‌ஷேவின் சார்பில் இலங்கை அரசு நேரடியாக மனு தாக்கல் செய்தது.

மேலும் படிக்க | இலங்கை அதிபருக்கான வாக்கெடுப்பில் இந்தியா அழுத்தம் கொடுத்ததா... இந்திய தூதரகம் கூறுவது என்ன!

ராஜபக்‌ச தங்குவதற்காக, சிங்கப்பூர், மாலத்தீவு மற்றும் இப்போது தாய்லாந்து அரசாங்கங்களுடன் இலங்கை நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளது. கடந்த மாதம் அவரையும் அவரது மனைவியையும் கொழும்பில் இருந்து மாலேக்கு அழைத்துச் சென்ற விமானப்படை ஜெட் விமானத்திற்கான கட்டணம் மட்டுமே அரசின் பணத்தில் செலுத்தப்பட்டதாக இலங்கை செய்தித்தாள் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான மற்ற செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டனர்.

வெளிநாடுகளில் உள்ள பலமான தொடர்புகளின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பத்தினர் தங்குவதற்கான செலவுகளை பணக்கார வர்த்தக நிறுவனங்கள் செலுத்துகின்றன.

மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News